புதுச்சேரி சட்டசபை பிப்., 3ல் கூடுகிறது
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை, வரும் பிப்., 3ம் தேதி கூடுகிறது,
புதுச்சேரி சட்டசபையில் கடந்த ஆக., 22ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. ஆக., 30ம் தேதியுடன் கூட்டத் தொடர் முடிவடைந்தது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். வரும் பிப்ரவரி மாதம் இறுதியோடு, சட்டசபை கூடி 6 மாதங்கள் முடிவடைய உள்ளது. அதனடிப்படையில், வரும் பிப்., 3ம் தேதி புதுச்சேரி சட்டசபை கூட உள்ளது.
இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:
புதுச்சேரி 15வது சட்டசபையின் மூன்றாம் கூட்டத் தொடரின் மூன்றாம் பகுதி கூட்டம், வரும் பிப்.,3ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.
அன்றைய தினமே அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாள் என்பதை முடிவு செய்யும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு குளிர்கால கூட்டமாக சபை கூட்டப்படுகிறது. வரும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையோடு துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!