ADVERTISEMENT
கடலுார்: கடலுாரில் குப்பையை எரிக்க வைத்த தீயில், கார் முழுவதும் எரிந்து சேதமானது.
கடலுார் பாதிரிக்குப்பம் மணியக்கார தெருவை சேர்ந்தவர் இளையராஜா, 42. இவர் தனக்கு சொந்தமான பழைய இண்டிகா காரை வீட்டு அருகே காலிமனையில் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், காலி மனையில் குவிந்து கிடந்த குப்பையில், சிலர் நேற்று தீ வைத்துள்ளனர். மளமளவென தீ பரவி, கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது.இளையராஜா மற்றும் அப்பகுதியினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
தகவலின்பேரில், கடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். எனினும், கார் முழுவதும் எரிந்து சேதமானது.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!