ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் மாதா அமிர்தானந்தமயி மடம் நிர்வகிக்கும், அமிர்தா வித்யாலயம் துவக்க விழா நடந்தது.
விழாவையொட்டி, கணபதி ஹோமம் நடந்தது. மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பொருளாளர், தலைமை சீடர்களில் ஒருவருமான சுவாமி ராமக்ரிஷ்ணானந்த புரி குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பள்ளியின் சிறப்பம்சங்கள், மாதா அமிர்தானந்தமயி மடம் எடுத்து வரும் சமூக நலன் சார்ந்த சேவைகள் குறித்து விளக்கினார்.
டாக்டர் முத்துராமன், அமிர்தா வித்யாலயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிகளின் தாளாளர் சுவாமினி பக்திப்ரியாம்ரித்த ப்ராணா, அமிர்தா வித்யாலயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிகளின் கல்வி அலுவலர் முரளிதரன், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் முக்கிய சீடர்கள், நிர்வாகிகள் மற்றும் மூலக்குளம் அமிர்தா வித்யாலயம் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் இரண்டாவது பள்ளி இதுவாகும். பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான முன் பதிவு துவங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!