அரசு அலுவலகங்களில் குறை தீர்வு கூட்டம்
புதுச்சேரி: அரசு அலுவலகங்களில் மாதந்தோறும் 15ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்த கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலகத்திலும் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். 15ம் தேதி அரசு விடுறை தினமாக இருந்தால் இதற்கு அடுத்த நாள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.
அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்களிடம் து மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைதீர் நாள் கூட்டம் நடக்கும் தினத்தில் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் கட்டாயம் இருந்து மனுக்களை பெறவேண்டும்.
பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தத்த துறையினர் செய்ய வேண்டும். மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
குறைதீர் கூட்டம் நடத்தப்படும் நாட்களில் அரசு அதிகாரிகள் வேறு எந்தவிதமான அரசு அலுவல் கூட்டங்களும் நடத்தக்கூடாது.
குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
இதற்கான அரசாணையை, கவர்னரின் உத்தரவின்படி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஹிரன் பிறப்பித்துள்ளார்..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!