ADVERTISEMENT
புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆங்கிலத்துறை சார்பில் இரண்டு நாள் மொழித்திறன் மேம்படுத்தும் பயிற்சிப்பட்டறை பயிலரங்கம் நேற்று துவங்கியது.
ஆங்கிலத்துறை பேராசிரியர் ராஜவேலு வரவேற்றார். நிறுவனத்தின் இயக்குனர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் ஞானசேகரன் வாழ்த்தி பேசினார்.இணை பேராசிரியர் ரூபி தவசிலி நன்றி கூறினார்.
இதில், விழுப்புரம் அண்ணா அரசு கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் ரவி 'நடைமுறையில் வெளிநாட்டின் வெளிப்பாட்டுத் திறனில் ஆங்கில மொழியின் பங்கு' குறித்தும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் சுரேஷ் 'பலவிதமான வெளிப்பாடுகளுக்கான சொற்றொடர் அமைப்பு முறைகள்' குறித்தும், தாகூர் கல்லூரி ஆங்கில பேராசிரியர் விஜய பழனிராஜா 'சொற்களஞ்சியத்தை வளப்படுத்துவதில் அகராதியின்பங்கு' குறித்தும் ஆய்வுரை வழங்கினர்.
இதில், ஏராளமான மாணவர்கள், பிறத்துறைகளில் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!