ADVERTISEMENT
புதுச்சேரி : நேருயுவகேந்திரா சார்பில் புதுச்சேரியில் கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, ஒடிசா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் மத்தியபிரதேச மாநில பழங்குடி இளைஞர்கள் 200 பேர் புதுச்சேரி வந்துள்ளனர்.
இவர்கள் தமிழ் கலாசாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் அவர்கள் தங்கியுள்ள முத்தியால்பேட்டை இளைஞர் விடுதியில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா இணை இயக்கனர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். தனசுந்தராம்மாள் சமூக இயக்கம் ஆனந்தன், அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!