ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பெயரில் நமோ கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி, தாகூர் அரசு கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 அணிகள் பங்கேற்றன. மூன்று நாட்கள் பகல் இரவு ஆட்டமாக போட்டிகள் நடந்தது.
இதில், ரைசிங் காய்ஸ் (வைத்திக்குப்பம்) அணி முதல் பரிசை தட்டி சென்றது. புதுச்சேரி பா.ஜ., இளைஞரணி அணி 2ம் பரிசையும், நம்மவர் சிசி எணி 3வது பரிசையும், பி.ஓய் மாபியா அணி 4ம் பரிசையும், ரகானே சிசி, கேவி பிரதர்ஸ் அணிகள் 5ம் பரிசுகளை வென்றது.அதில், ஆட்ட நாயகன் விருதை அசோக்,பெஸ்ட் கேச் கணபதி, பாலா ஆகியோர்பெற்றனர்.ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வேலு, ராகுல், கார்த்திக், ஹாட்ரிக் சிக்சர் அடித்த பிரேம், கணபதிவென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், சிவசங்கர், வெங்கடேசன், ராமலிங்கம், பா.ஜ., தொழில்பிரிவு அமைப்பாளர் ராஜகணபதி, ஓ.பி.சி பிரிவு தேசிய அமைப்பாளர் காசிலிங்கம், இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, உழவர்கரை தலைவர் நாகேஷ்வரன், ரமேஷ், ராஜகணபதி, பிரபுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிகளை, இளைஞரணி துணை தலைவர்கள் உமாசங்கர், ராக் பெட்ரிக்ஸ், செயலாளர்கள் அஷ்வின்குமார், அமல்ராஜ், வர்த்தக பிரிவு அமைப்பாளர் சீனிவாச பெருமாள், செயற்குழு செந்தில்குமரன், ஓ.பி.சி., அணி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!