தொடரும் துப்பாக்கி சூடு அமெரிக்காவில் 7 பேர் பலி
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த இரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். சந்தேகத்துக்குரிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவில், அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஐந்து சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தெற்கு கலிபோர்னியாவில் நடன அரங்கில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஹாப் மூன் பேயில் உள்ள காளான் பண்ணையில் நேற்று முன்தினம் மதியம் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்தில் இருந்த 8 கி.மீ., தொலைவில் உள்ள லாரி போக்குவரத்து சேவை நிறுவனத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சன்லி ஸாவோ, 67, என்ற நபரை, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவரது காரில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இவர் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில், ஸாவோ ஏற்கனவே பணியாற்றியதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!