ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய அளவில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, 2021 அக்டோபரில் இந்தியா ஏற்றது. இதனைத்தொடர்ந்து 2022ல் டில்லியில் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. அந்த வகையில் இந்தாண்டு கோவாவில் மே மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

இதற்காக அந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விரைவில் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங்-க்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
தீவிரவாதத்தை பரப்புபவனையும், அந்த தீவிரவாதத்துக்கு ஐநா அவையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி காப்பாற்றுபவனையும் அழைத்து பயங்கரவாத தடுப்பு பற்றி பேசப்போகிறோம்.
மதத்தின் பெயரால் உருவான பாகிஸ்தான் மனதளவிலும் மதஅளவில் இல்லை என்பது தான் உண்மை. எந்த மதமும் நல்லவைகளை தான் போதிக்கின்றன. ஆனால் பெயரளவில் மதத்தை சொல்லி நடைமுறையில் அதனை அட்டூழியங்களை செய்தால் யார் நம்புவார்கள். வெளிநாட்டில இந்தியாவை பகைத்துக்கொள்ளும் நோக்கில் பாரத பிரதமரை அசிங்கமாக பேசிய பூட்டோவின் பேரனுக்கு வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்தது தான் இந்தியாவின் பெருந்தன்மை. கெட்டவன் தானாக அழிவான் என்பது நமது வாழ்க்கையின் நம்பிக்கை. ஆனால் அவனையும் பதிலுக்கு அவனைப்போல் பேசாமல் அவனது நாட்டை மனதில் கொண்டு அழைப்பு விடுப்பது தான் மோடி போன்றவர்களின் தலைமை பண்பு. இன்று பாகிஸ்தான் மக்கள் படும் பாட்டிற்கு காரணமே அவர்களது 75 வருட சுயநல அரசியல்வாதிகள் தான். படை பலமும், ராணுவ வலிமையும் தான் தேவை என்று நாட்டையே சீரழித்த அரசியல்வாதிகள் இன்று அந்நாட்டு மக்களுக்கு உணவை கூட வழங்க முடியாமல் இருக்கிறார்கள். மோடி ஒரு நிமிடத்தில் உதவி செய்யமுடியும். ஆனால் அதையும் வாங்கிக்கொண்டு உதவி செய்பவர்களை தூற்றும் அவர்களின் மனப்போக்கு தான் அவரை தடுக்கிறது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தால் யார் உதவுவார்கள். மக்களை மூளைச்சலவை செய்து இன்று வாழ்க்கையே தொலைக்கும் அளவிற்கு செய்து இருக்கிறார்கள். அது தான் வருத்தம் அளிக்கிறது. மதத்திற்கு அப்பாற்பட்டு மனித நேயத்தால் தான் இவர்கள் காப்பாற்றப்பட முடியும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்.
என்னாது? பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும்