Load Image
Advertisement

அமைச்சர் உதயநிதி வர தாமதம்: வெயிலில் மாணவர்கள் அவஸ்தை

Minister Udhayanidhis arrival delayed: students distressed   அமைச்சர் உதயநிதி வர தாமதம்: வெயிலில் மாணவர்கள் அவஸ்தை
ADVERTISEMENT

சென்னை: சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவுக்கு, அமைச்சர் உதயநிதி தாமதமாக வந்ததால், மாணவ - மாணவியர் ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், நேற்று சென்னையில் துவங்கின. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தில், கால்பந்து, கபடி, இறகு பந்து போட்டிகளை, அமைச்சர் உதயநிதி, நேற்று காலை துவக்கி வைத்தார். அதேபோல், தியாகராய நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில், கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் சதுரங்க போட்டிகளையும், நேற்று காலை 10:30க்கு அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.


விழாவில் பங்கேற்க, காலை 9:00 மணிக்கு, மாணவ - மாணவியர் அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டனர். ஆனால், அமைச்சர் காலை 11:45 மணிக்கு வந்தார். அதுவரை மாணவ - மாணவியர் வெயலில் காத்திருந்தனர். சதுரங்க போட்டியை துவக்கி வைத்துவிட்டு, வேகமாக சென்று விட்டார் உதயநிதி. அமைச்சர் முன்னிலையில், தன் சிலம்பாட்ட திறமையை காண்பிப்பதற்காக, மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் காத்திருந்தார்; அவர் ஏமாற்றம் அடைந்தார்.


வாசகர் கருத்து (13)

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    அவர்தான் விளையாட்டு துறை அமைச்சராச்சே போற வழியில கொஞ்சம் நேரம் விளையாண்டாட்டு வர லேட்டா ஆயிருக்கும்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இதொன்றும் புதியதில்லை. மக்கள் வெயிலில் காயணும்..மந்திரினா லேட்டா தான் ஆஜராகணும்.

  • Siva - Aruvankadu,இந்தியா

    காசு வாங்கி ஓட்டு போட்டு விட்டு உங்களுக்கு எதற்காக இந்த திமிர். காத்திருக்க மாட்டீங்களா.

  • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

    கொளுத்தி போட்டுகிட்டே இருங்க. கொளுத்தினாகூட... அது புஸ்ஸூ...ன்னு நமத்துப்போன பட்டாசு ஆயிடும்.....

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    இந்த சின்ன பசங்களில் ஒருவரை அமைச்சராக்கிவிட்டால் எல்லாம் சரியாய் போய்விடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement