ADVERTISEMENT
''கட்சிக்காக உழைக்கறவா சென்னையில மட்டும் தான் இருக்காளான்னு கேக்கறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., ரங்கநாதன், சேமிப்பு கிடங்கு நிறுவன வாரியத்தின் தலைவராகவும், தி.மு.க., பிரசார பாடகர் இறையன்பன் குத்துாஸ், சிறுபான்மை ஆணைய துணை தலைவராகவும், சமீபத்துல நியமிக்கப்பட்டா ஓய்...
''ஏற்கனவே, தி.மு.க., தலைமை நிலைய செயலரான, 'துறைமுகம்' காஜாவுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக வாரிய தலைவர் பதவி குடுத்திருக்கா... 'வாரிய தலைவர் பதவிகளை, சென்னையை சேர்ந்தவாளுக்கே தராளே... நாங்க எல்லாம் கட்சிக்கு உழைக்கலையா'ன்னு, மற்ற மாவட்ட கட்சியினர் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அதிகாரிகளுக்கு, 'டோஸ்' கிடைச்ச கதையை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை ஏர்போர்ட் விரிவாக்கம், மேற்கு பைபாஸ் ரோடு, தொழிற்பேட்டை போன்ற திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்த வேண்டிய பணிகள் இருக்குதுங்க... அரசு தரப்புல நிதி ஒதுக்கிட்டாலும், வருவாய் துறை அதிகாரி கள் மந்தமா இருக்கிறதால, திட்டம் நகரவே மாட்டேங்குது...
''மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்றதை, கோவை மாவட்ட வருவாய் அதிகாரிகள் காது கொடுத்து கேட்கிறது இல்லை... இதை, துறை அமைச்சரிடம் சொல்லி, செந்தில் பாலாஜி வருத்தப்பட்டாருங்க... அவரும், உடனே கோவைக்கு பறந்து, வருவாய் துறை அதிகாரிகள் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டாருங்க...
''கூட்டத்துல அமைச்சர் பேசுறப்ப, 'என் சொந்த மாவட்டமான விருதுநகருக்கு, நான் தான் மின் துறை அமைச்சர்... அதே மாதிரி, கோவைக்கு செந்தில் பாலாஜி தான் வருவாய் துறை அமைச்சர்... மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு எல்லா துறைக்குமான கூட்டு பொறுப்பு இருக்குது... அதை புரிஞ்சு அதிகாரிகள் செயல்படணும்'னு, வகுப்பு எடுத்தாருங்க...
''செந்தில் பாலாஜி பேசுறப்ப, 'உங்க யாரையும் சட்டத்துக்கு புறம்பா வேலை செய்யச் சொல்லலை... செய்ற வேலையை, விரைவா செய்யுங்கன்னு தான் சொல்றோம்'னு, 'பொடி' வச்சு பேசினாருங்க... இதனால, அதிகாரிகள் அரண்டு போயிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
வாசகர் கருத்து (3)
அதிகார வர்கம் நிலம் கையகப்படுத்த யார் பங்கு தருகிறார்களோ அவர்களுடைய நிலத்தை கையகப்படுத்துவதுடன் சிலரிடம் அதிக பங்கு பேசிக்கொண்டு அவர்கள் நிலங்களை வீட்டு மனைகளுக்கு உரிய தொகையை நிர்ணயித்து அரசு நிதியத்தை சூறையாடுகின்றது.பங்கு தராதவர்கள் நிலங்களை கையகப்படுத்தி தொகை வழங்காமல் ஏமாற்றும் வேலையும் நடக்கிறது.ஆக லஞ்சம் இன்றேல் சேவை இல்லை.லஞ்சம் கொடுத்தால் எதையும் செய்வோம் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என இறுமாந்து இருக்கின்றனர்.
அரசியலும் சினிமாவும் ஒன்று, நாம் அவ்வப்போது முக்கிய பிரமுகர்களை சந்தித்துக்கொண்டே இருக்கவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு நம் நினைவே வரும், எதிர்பார்த்தது கிடைக்கும் வந்தே மாதரம்,
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எப்பா செந்தில் பாலாஜி க்கு கூட ஆப்பு வெச்சு பேசுனாரே விருதுநகர் அமைச்சர் , அவரை மெச்ச வேண்டும் .