சென்னை: ''அ.தி.மு.க. ஒன்றுபட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றுதான் பிரதமர் விரும்புகிறார்'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் தன் ஆதரவு நிர்வாகிகளுடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து பேசினார்.
பின் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும். பா.ஜ. போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும். அதே நிலைப்பாட்டுடன் புதிய நீதிக் கட்சி தலைவரை சந்தித்தோம். அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். வேட்பு மனு தாக்கல் 31ல் தான் துவங்குகிறது. வேட்புமனு முடிவதற்கு முன்பு பல்வேறு கட்சிகள் நிலைப்பாடு மாறும்.

யார் மறுக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களை சந்திக்கும் போதெல்லாம் பிரதமர் தன் விருப்பத்தை கூறுகிறார். ஏற்கனவே பழனிசாமியின் நிலைப்பாட்டை 'உலக மகா அரசியல் வித்தகர்' ஜெயகுமார் சொல்லியபடியே இருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். பழனிசாமி தன் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். மறுபடி அவர் அப்பதவியை கோர முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (12)
பிரதமர் பெயரை இங்கே இழுக்கின்றீர்கள்? இது உங்கள் கட்சி. உங்களை அதிமுக வெளியேற்றி இருக்கிறது.
முதலில் நீங்கள் ஒன்றுபடுங்கள் . யாருடைய சிபாரிசும் வேண்டாம் . உங்களது பசிக்கு நீங்கள்தான் சாப்பிடவேண்டும். உங்கள் உடம்பில் அரித்தால் நீங்கள்தான் சொரிந்துகொள்ளவேண்டும் .
மக்களை பற்றிய கவலை எந்த அரசியல் வாதிக்கும் இல்லை. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்து என்ன சாதித்தார்? இவருக்கு பதவி முக்கியம் ( எல்லா அரசியல்வாதிகளுக்கும்). பேசாம ஜானகி அம்மையார் எப்படி ஜெயலலிதாவிற்கு கட்சி உரிமையை விட்டு கொடுத்தாரோ அதுபோல எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று கட்சி பலம் பெற தியாகம் செய்யும் துணிவு இவருக்கு உண்டா? அப்படி செய்தால் தியாகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்கும்.ஓ பி ஸ் க்கு கட்சியில் செல்வாக்கு இல்லை.ஆகவே கட்சி நன்மைக்காக இவர் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும்.
அடுத்ததாக அண்ணாமலைதான் அடுத்த முதல்வர்னு பெரியவர் ஆசைன்னு செய்தி வரும்.
OPS அவர்கள் கொஞ்சம் நாள் அரசியல் பதவிகளை விட்டு ஓய்வு எடுத்தாள் admk க்கு அவர் செய்யும் நன்றி கடன்.