சென்னை: சர்ச்சைக்குரிய வகையில், சித்த மருத்துவ கருத்துகள் கூறியது தொடர்பாக, பிப்.,10க்குள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்குமாறு, சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா. இவர், சமூக வலைதளங்களில் சித்த மருத்துவ, 'டிப்ஸ்' சொல்வதன் வாயிலாக பிரபலமானவர். சமீபத்தில் அவர் அளித்த சில, 'டிப்ஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, 'ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால், 3 கிலோ எடை கூடும்; குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும்; தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்' என்று தெரிவித்தார்.
இவை சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இவர் மீது, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், அவரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியதுடன், நேரில் ஆஜராகவும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லுாரி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று சித்த மருத்துவர் ஷர்மிகா, தன் வழக்கறிஞர்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், சித்த மருத்துவக் கல்லுாரி முதல்வர் கனகவல்லி உள்ளிட்டோர், ஷர்மிகாவிடம் புகார்கள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் கூறியதாவது:
சித்த மருத்துவ கவுன்சில் கொடுத்த அழைப்பாணையை ஏற்று, மருத்துவர் ஷர்மிகா ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது கருத்துக்கள் தொடர்பாக வந்த புகார்கள், அவரிடம் தரப்பட்டது. அனைத்தையும் படித்து பார்த்துவிட்டு, எழுத்து பூர்வமாக பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வரும் பிப்.,10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டு உள்ளது. அவர் விளக்கம் அளித்தபின், நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (32)
சரியான விளக்கம் இல்லையெனில் அதை மறுத்து விளக்கம் கொடுத்து பிரச்னையை முடிக்க ஏன் தாமதம் ?. கிரிமினல் வேலைகளை செய்தவர்கள் எல்லாரும் வெளியில் எந்த தண்டனையும் இல்லாமல் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இதை ஒரு பெரிய தவறு போல காட்டுவது ஏன் ?.
சொல்லி விட்டு பதிந்திருந்தால் சர்ச்சைக்கு இடமேது. பெரும்பாலான யூடியூப் சேநல்கள் டிஷ்களைமேற் பதிவிட்டு அடித்து விடுகிறார்கள்
நான் எட்டு நுங்கு சாப்புட்டேன். எனக்கு ஒர்க்கவுட் ஆச்சு.
முதலில் சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு வாழ்த்துக்கள். அவர் கூறியுள்ள மருத்துவ குறிப்புகளாக ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால், 3 கிலோ எடை கூடும் தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும்'..என்பது உண்மை. நான் எப்போது எனது மனைவி அருமையாக குளோப் ஜாமுன் செய்வார், இரண்டு மூன்று ஜாமூனுடன் நிறுத்தி கொள்ளலாமென்றால் அதன் சுவை என்னை 4-5 குளோப் ஜாமுன் சாப்பிட வைத்துவிடும். எப்போது குளோப் ஜாமுன் சாப்பிட்டாலும் எனது 4-5 கிலோ எடை கூடுவதை நான் உணர்ந்துளேன், எடை எந்திரத்தில் சோதனை மூலம் உறுதி செய்துள்ளேன். இரண்டாவதாக பண நுங்கு சாப்பிட்டால் நம் உடல் குளிச்சியாக இருக்கும், அறிவியல் பூர்வமாக நுங்கு நம் தேகம் தோல் பளிச்சிட உதவுகிறது. நிறைய பெண்களுக்கு மார்பகம் அளவு தேவையான வளர்ச்சி பெறவில்லை என ஏக்கம் இருக்கும். ஆதலால் உளவியல் ரீதியாக மனநோய் பாதிப்புக்கு ஆளாகி தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார். நம் கிராமத்தில் வயதான பாட்டியிடம் மார்பக வளர்ச்சிக்கு வைத்தியம் கேட்டல் பண நுங்கு மற்றும் பலா சுளையை தான் சாப்பிட சொல்வார்கள். ஏன் நன் தமிழில் மன்னா என்ற பெயரில் உள்ள நடிகை பண நுங்கு மகிமை தெரியாமல் கோடிக்கணக்கில் செலவு செய்தாராம், கோடிக்கணக்கில் செலவு செய்தும் பயனில்லாமல் ஆந்திராவில் ஷூட்டிங் சென்றபோது ஒரு பாட்டி நுங்கு பயன்களை சொல்லி சாப்பிடச்சொன்னாராம். அதன் பின்புதான் சற்று முன்னேற்றம் கொண்டதாம் என பத்திரிகைகளில் சில வருடங்களிலும் முன்பு படித்த நினைவு வருகிறது. முக்கியமாக சித்த மருத்துவர் ஷர்மிகா..அவருடைய மருத்துவ பதிவில் முக்கியமான பதிவை பின்பற்றி எனது தொண்ணுறு வயது தாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுத்தி உள்ளது . இதை எந்த மன்றத்திலும் நான் என்னுடைய தாயை அழைத்து வந்து நிரூபிக்க முடியும். அவர் சொன்ன பாதம், பிஸ்தா, பேரிச்சம், வால்நெட் மற்றும் உலர் திராட்சை ஊறவைத்து அரைத்து தினமும் காலையில் கூழ் போல் குடித்தால் உடல் வலுவாகும், நோய்நொடி நீங்கும் என கூறியிருப்பார். என்னுடைய 90 வயது தாய் நடக்க முடியாமல் படுக்கையிலே இயற்க்கை உபாதைகளை கழித்து விடுவார். அனால் இந்த கூழ் சாப்பிட ஆரம்பித்த ஒரு மாதத்தில் அனைத்தும் மாறி உடல் நலம் தேறி நன்றாக குச்சி உதவியின்றி நடக்கிறார். தானாக பாத் ரூம் செல்கிறார். மருத்துவர் அவர்களே உங்கள் மருத்துவ குறிப்புகள் தொடர எனது ஆதரவு எப்போதும் உண்டு. இந்த பிரச்சினை க்கு பின்னால் வேறு ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் நான் சந்தேகிக்கிறேன். கவலை படாமல் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு எதிகொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
பிரபலமான பல கருத்தில் 3 தவறு நடந்துள்ளது. இதற்கு விளக்கம் தேவை என இந்த பெண்ணில் கதையை முடிக்கிறார்கள். எம்.பி. முன்னாள் மத்திய ஆனைச்சார் கையயை வெட்டுவேன் என்கிறார். அவர் எங்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த டாக்டர் மக்களுக்கு பயனுள்ளதாய் செய்யட்டும்.