ADVERTISEMENT
திருவாடானை : ஹீரோ ஆக ஆசைப்படும் மாணவர்களே போதைக்கு அடிமையாகுகிறார்கள் என்று திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் பேசினார்.
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் மாதவி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் மணிமேகலை வரவேற்றார். திருவாடானை டி.எஸ்.பி.,நிரேஷ் பேசியதாவது:
போதை பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களின் வாழ்க்கை வீணாகிவிடும். மாணவர்கள் மட்டுமல்ல அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். ஏன் இந்த பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள் என்று ஆராய்ந்தால், ஹீரோவாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால் தான் பெரும்பாலான மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள்.
நமது நடவடிக்கையை பார்த்து மற்றவர்கள் வியப்படைய வேண்டும் என்று தான் மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். இப்படி ஹீரோ ஆக விரும்பும் மாணவர்களின் வாழ்க்கை கடைசியில் ஜீரோ ஆகிவிடும். படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுபவர் தான் உண்மையான ஹீரோ, என்றார்.
ராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் பெரிய கருப்பன் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். தமிழ்த்துறை தலைவர் பழனியப்பன் நன்றி கூறினார். மாணவர்களின் மனித சங்கிலி நடந்தது.

வாசகர் கருத்து (3)
போதை பொருள் போதையும் தமிழ் நாட்டின் தாஸ்மாக் மது ஞானத்தை தரும் போல?
It is not drugs but many of the Students are getting easily addicted to Liquors.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மது இல்லாத தேசம் இல்லை, மது இது சோமபானம் சுராபானம் என ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து பலவகைகளில் உருமாறி வந்துகொண்டுள்ளது. தமிழகத்தில் மது தடைசெய்தால் பல வெளிநாட்டு முதலீடுகள் நம் மாநிலத்தைவிட்டு செல்லூம்.