தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: தி.மு.க., ஆட்சி அனைத்து துறைகளிலும் தோற்று போன ஆட்சி. மகளிருக்கு உரிமை தொகையாக மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர்; இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்று கூறினர்; மின் கட்டணத்தை உயர்த்தினர். சொத்து வரியையும் அதிகரித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
டவுட் தனபாலு: மகளிருக்கு, 1,000 ரூபாய், மின் கட்டண உயர்வு எல்லாத்தையும் ஈடு செய்ற மாதிரி, தொகுதியில ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணமழையை கொட்டி, ஆளுங்கட்சியினர் வெற்றியை, 'வாங்கிடுவாங்க' என்பதில், 'டவுட்'டே இல்லை!

அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: ஏழைகள் இல்லாத தமிழகத்தை, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஒருங்கிணைந்து உருவாக்குவோம். நம் தலைவர்களின் கனவை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க தலைவர்களும், நீங்களும் முதல்வர்களா இருந்து, தமிழகத்தை, 33 வருஷம் ஆட்சி செஞ்சிருக்கீங்க... அப்ப எல்லாம் உருவாக்க முடியாத ஏழைகள் இல்லாத தமிழகத்தை, எதிர்க்கட்சியா, அதுவும் நாலஞ்சு அணியா இருந்துட்டு எப்படி உருவாக்குவீங்க என்ற, 'டவுட்' எழுதே!
பத்திரிகை செய்தி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள, தே.மு.தி.க., தலைமை, அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ஆனந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
டவுட் தனபாலு: சுவத்துல போய் முட்டிக்கிட்டா மண்டை உடையும்னு தெரிஞ்சும், வம்படியா போய் முட்டுறதுக்கும் ஒரு முரட்டு துணிச்சல் வேணும்... அது, தே.மு.தி.க., தலைமைக்கு நிறையவே இருக்குது... அதை விட அதிக தைரியம், வேட்பாளர் ஆனந்துக்கு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
வாசகர் கருத்து (8)
. திமுகவினர் அவர்களை முன்னேறாமல் பார்த்துக்கொள்வார்கள்
முதலில் பாஜகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டி விட்டு பிறகு திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்!
இந்த உலகத்திலேயே பிரேமலதாவுக்கு உள்ள மாதிரி ஆசை யாருக்கும் இருக்காது. ஏற்கனவே கட்சியில் அவரும் அவரின் தம்பியும்தான் பாக்கி இருக்கிறார்கள்.இந்த லெட்சணத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தனியாக நிற்க போகிறார்களாம்.ஏதோ பாமக மாதிரி கவுரவமாக தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்தாலாவது 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளில் பேரம் பேசி ஒன்றிரண்டு தொகுதிகளை பெறலாம்.அதை விட்டு வரட்டு கௌரவத்துக்காக இப்படி தனியாக நின்று டெபாசிட் கூட வாங்காமல் தோற்றுப் போனால் பிறகு எந்த கட்சியும் இவர்களை மதிக்க மாட்டார்கள். விஜயகாந்த் கஷ்டப்பட்டு உருவாக்கிய தேமுதிக என்ற கட்சியை குழி தோண்டி புதைப்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்
15 lakhs per person a/c settlementENNANGA ACHU.
நாம குடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாம 9 வருஷமா மத்திய அரசு இருக்கிறது