உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வ.உ.சிதம்பரம் பிள்ளையின், 150-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, தமிழக அரசு வெளியிட்ட சிறப்பு மலரின் முதல் பக்கத்தில், வ.உ.சி., படத்துடன், அவரது ஒரிஜினல் கையெழுத்திலுள்ள, 'பிள்ளை' என்ற சொல் நீக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளது. மெத்தப் படித்த அரசு அதிகாரிகள், இதற்கு சொல்லியுள்ள காரணம், அது, ஜாதி பெயராம்!
அட அறிவாளிகளே... தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, நன்கு பரிச்சயமானது, 'கோனார் நோட்ஸ்!' திருவள்ளுவர் முதல் திரு.வி.க., வரை, பலரையும் மாணவர்கள் அறிந்து கொண்டது, கோனார் நோட்ஸ் என்ற புட்டிப் பால் வழியாகத் தான் என்றால் மிகையில்லை. காலம் காலமாக, சங்க இலக்கியம் தொட்டு, சமீபத்திய இலக்கியம் வரை மாணவர்களுக்கு போதித்து வந்த, அந்த கோனார் நோட்சில், ஜாதி பெயரான கோனார் உள்ளது என்பதற்காக, அந்த வார்த்தையை நீக்கி விட்டு, வெறும் நோட்ஸ் என்றா கூறுவீர்கள்?

முந்தைய தலைவர்களுக்கு, அவர்களின் ஜாதி பெயர்களே அடையாளம். அவர்களை குறிப்பிடும் போது, 'பிள்ளைவாள்' என்றோ, 'முதலியார்வாள், ஐயர்வாள்' என்று தான் மரியாதையாக குறிப்பிடுவர்; அதில், உங்களுக்கு என்ன மோசம் போச்சு?
ஒரு பக்கம், ஜாதி பெயரை நீக்கும் இந்த திரிசமம்; மற்றொரு புறம், கட்சி நிர்வாகிகளின் ஜாதியை கணக்கெடுக்கச் சொல்லி, முதல்வர் உத்தரவு; ஏன் இந்த இரட்டை வேடம்? அதாவது, உங்களுக்கு சாதகமான விஷயங்களில் ஜாதி வேண்டும். அப்படித்தானே, முதல்வர் அவர்களே...
ராமாயணத்தையும் படிக்க வேண்டும், கோவிலையும் இடிக்க வேண்டும்; அதுதானே உங்கள் பாலிசி. உங்களின் அரை வேக்காட்டு, 'பிள்ளை' தமிழ் விளையாட்டை, ஊருக்கும், நாட்டுக்கும் உழைத்த பெரியோரிடம் காட்ட வேண்டாமே... தன் முடியே தன் அடையாளம் என்கிறாள், விளம்பரத்தில் ஒரு பெண். தலைமுடியே அடையாளம் என்கிற பொழுது, தலைமுறைகளின் அடையாளமான ஜாதிப்பெயரை, தலைவர்கள் தாங்கி நின்றால் என்ன கெட்டு விடும்?
ஜாதி ஒழிப்பை மேடையில் பேசுபவர்கள் கூட, தங்கள் பிள்ளைகளுக்கு ஜாதி பார்த்து தான் மணமுடிக்கின்றனர். உங் களின் பகுத்தறிவு பகலவன், ஈ.வெ.ரா., முதலில், ராமசாமி நாயக்கராகத் தானே இருந்தார். ஜாதியோ, மதமோ பெயரில் இல்லை; மனதில் உள்ளது. புரிந்து கொள்ளுங்கள்.
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றான், அன்றைய எட்டயபுரத்து இலக்கியவாதி; 'ஜாதிகள் உள்ளதடி' என்கிறார், இன்றைய கோபாலபுரத்து அரசியல்வாதி.
வாசகர் கருத்து (31)
இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை - எல்லாம் அரசியல்-தான் - - - ஜாதி பெயரை சேர்த்து சொன்னால் - அவர் தமிழரா - தெலுங்கரா - மலையாளியா - கன்னடனா - என்று தெரிந்து விடும் - - - அது இங்கே கிட்டத்தட்ட 1967-முதல் இப்போது வரை , தமிழர் / தமிழ் என்று சொல்லி ஏமாற்றி ஆட்சி செய்யும் போலி தமிழர்களுக்கு ஆப்பு வச்சா மாதிரி ஆயிடும் - - பிள்ளைவாள் / முதலியார்வாள் / தேவர்வாள் / நட்டார்வாள் / மூப்பனார்வாள் / கௌண்டர்வாள் / கோனார்வாள் - - etc-etc தமிழ்நாட்டு ஜாதிகள் நாய்க்கர்வாள் / ரெட்டியார்வாள் - இப்டி சொன்னால் அவர்கள் தமிழர்கள் அல்ல - தமிழ் தெரிந்த தெலுங்கர்கள் என்பது தெரிந்து விடும் இதனால்தான் 1967-ம் ஆண்டு ஆரம்பித்த கருணாநிதி - ஈவேரா - கூட்டணி சகாப்தம் முதல் ஆந்திரா/கர்நாடக/கேரளா- இங்கிருந்து வந்தேறிகள் ஜாதி பெயரை மறைத்து - தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து - தாங்களும் தமிழர்கள்தான் என்று தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் . . . தமிழன் பேபேபேபே . . . சீமான் இதைத்தான் சொல்லிக்கிட்டுருக்கிறார் ( சீமானும் தனது உண்மையான முகத்தை மறைத்து போலி நாடகம் ஆடுகிறார் என்பதும் எல்லோரும் அறிந்ததே ) . . .
ஜாதி மதம் இனம் மொழி என்ற வேறுபாடுகள் மக்களிடையே இருப்பதனால் பிரச்சினையில்லை ஆனால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைக்கும் அரசியல்வியாதிகளால்தான் அனைத்துப் பிரச்சினைகளும் அவரவர் ஜாதி மதம் இனம் மொழி என்று கொண்டாடுவது அடிப்படைக்கு கருத்து சுதந்திரம் அதனை சட்டத்தின் மூலம் தடை செய்ய முயற்சிப்பது போல நடிப்பது முறையற்ற செயல். வாக்கு வங்கி வலுவாக இருக்கும் தேவர் போராடாத தயாராக இருப்பதால் அஞ்சும் இந்த வியாதிகள் மறைமுகமாக பிறரும் அப்படியே மாறவேண்டுமென்று விரும்புகிறார்கள் போலும் பிரச்சினைகளை உருவாக்கி வேறுபாடுகளை உருவாக்கி பிழைக்கும் இந்த ஈனப்பிழைப்பு அவசியமா இவர்கள் விழா எடுக்கவில்லையென்று திரு பிள்ளையவர்கள் அழுதாரா
துணிவு இருக்கிறதா இந்த விடியா மூஞ்சி அரசிற்கு.
என்ன ஒரு கேவலமான அரசியல். மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் என்று நம்பும் கூட்டம் பாவம்.
கோபாலபுரம் குடும்பத்திற்கு என்று ஒரு சரியான ஜாதி கிடையாது. அட அவர்களின் பூர்வீகம் கூட சரியாக தெரியாதாம். பலர் அவர்கள் ஆந்திராவிலிருந்து குடி பெயர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். ஒரு சிலர், திருட்டு ரயிலில் எங்கிருந்தோ சென்னை வந்தவர்கள் என்று கூறுகிறார்கள். ஊர் பேர் தெரியாத குடும்பத்திற்கு, ஜாதி மட்டும் எப்படி தெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால்தான் மற்ற பெயர்களில் உள்ள ஜாதியை எடுக்கிறார்கள் போலும்?