Load Image
Advertisement

ஸ்மார்ட் சிட்டி கடைகள் வாடகை அதிகம்; கவுன்சிலர்களுக்கு கமிஷன்;

Tamil News
ADVERTISEMENT

''பல கோடி ரூபாய் செலவழிச்சு கட்டிய கடைகள், ஏழு மாசமா பூட்டிக் கிடக்குவே...'' என்றபடியே, சூடான மெது வடையை கடித்தார், அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''வேலுார் புது பஸ் ஸ்டாண்ட் இருக்குல்லா... இதை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, 53 கோடி ரூபாய் செலவழிச்சு, விரிவாக்கம் செஞ்சாவ... போன வருஷம், ஜூன் மாசம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சாரு வே...

''பஸ் ஸ்டாண்ட்ல, 83 கடைகள் கட்டியிருக்காவ... இதுல, 68 கடைகளை மட்டும் வாடகைக்கு விட முடிவு செஞ்சாவ வே... ஒரு கடைக்கு, 20 லட்சம் ரூபாய், 'அட்வான்ஸ்' வாடகை, 50 ஆயிரம்... இது தவிர கவுன்சிலர்களுக்கு தனியா, 5 லட்சம் ரூபாய் வெட்டணும்...
Latest Tamil News
''வாடகை அதிகம்கிறதால, கடையை எடுக்க யாரும் வரல வே... இப்ப, ஒரு பெரிய நிறுவனத்துக்கு மொத்தமா எல்லா கடைகளையும் வாடகைக்கு விடப் போறாவளாம்... அதனால தான், மத்தவங்க எடுக்க முடியாதபடி, வாடகையை முதல்லயே உசத்தி அறிவிச்சதா, வியாபாரிகள் குற்றம் சாட்டுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (2)

  • Siva - Aruvankadu,இந்தியா

    திராவிடியா மாடல் என்பது இதுதான். தமிழன் டாஸ்மாக் சரக்கு குடித்து தன் கையை நக்கிவிட்டு போக வேண்டியதுதான்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இந்து அறநிலையத்துறையிடம் விட்டால் சதுர அடி ₹ 1 வீதம் அனைத்து இடங்களையும் வாடகைக்கு விட்டு கல்லாக்கட்டியிருப்பார்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்