ADVERTISEMENT
லண்டன்: உலக தடகள வீரர் உசேன் போல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தில் ரூ.98 கோடி மாயமானது.
சமீபத்தில் வெளியான 'துணிவு' படத்தில் வாடிக்கையாளர் முதலீடு பணத்தை வங்கி நிர்வாகம் வேறொன்றில் முதலீடு செய்து மோசடி செய்வது போல காட்சி இருக்கும்.
சினிமாவுக்காக மட்டுமே இது அமைக்கப்பட்டிருந்தாலும் நிஜத்திலும் இதேபோன்ற மோசடி அரங்கேறியுள்ளது. சாதாரண மனிதருக்கல்ல. உலக தடகள ஜாம்பவான் ஜமைக்காவின் உசேன் போல்ட்டிடம் இம்மோசடி நடந்துள்ளது.

உசேன் போல்ட் இங்கிலாந்து கிங்ஸ்டனை தலைமையிடமாக கொண்ட பங்கு, பங்குபத்திரங்கள் நிறுவனத்தில் ரூ.பல கோடி முதலீடு செய்துள்ளார். அவரது கணக்கிலிருந்து ரூ.98 கோடி தற்போது மாயமாகியுள்ளது.
தற்போது கணக்கில் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே உள்ளது. உசேன் போல்ட் சேமிப்பு தொகையில் பெரும்பகுதி இம்மோசடியில் பறிபோனதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தாண்டுகளாக உசேன் போல்ட்டின் முதலீடுகளை இந்நிறுவனம் கவனிக்கிறது. பத்து நாட்களுக்குள் பணம் கிடைக்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் அவரது வழக்கறிஞர்.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் 30 பேர் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நிறுவன முன்னாள் ஊழியர் இம்மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!