ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.
இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியை, தொடர்பு படுத்தியுள்ளனர்.
இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஆவணப்படத்தை முடக்கும்படி, மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை
இந்நிலையில், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் இளைஞர் அமைப்பான, டி.ஒய்.எப்.ஐ., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் ஆகியோர், இந்த ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கு, கேரள மாநில பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் பினராயி விஜயனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள மத்திய பல்கலையில், மாணவர்களில் ஒரு தரப்பினர் இந்த ஆவணப்படத்தை நேற்று முன்தினம் ரகசியமாக திரையிட்டுள்னனர்.
'சகோதரத்துவ அமைப்பு' என்ற பெயரில் செயல்படும் மாணவர்கள், இந்த படத்தை திரையிட்டுள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'முறையான அனுமதியின்றி படத்தை திரையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (26)
மருது சகோதரர்களையும், அவர்களின் மகன்களையும், பேரன் களையும், எந்த ஒரு குற்றம் செய்யாத உத்தமசாலிகளை, ஒட்டி பிழைக்க வந்த நாய்( பிரிட்டிஷ்) களுக்கு, வரி செலுத்தாத ஒரே காரணத்திற்காக, தூக்கிலிடப்பட்டார் கள், அதிலும் குறிப்பாக, ஒரு பேரனை நாடு கடத்தி, உணவுக்கு கூட வழி இல்லாமல், சிரமபடுத்தினர், கேரளாவில் வேலு தம்பி தளவாய் பொய் குற்றம் சுமத்தி, தூக்கில் இட முற்பட்ட போது, அவர் தற்கொலை செய்து கொண்டார்... இது போன்ற பல கீழ் தரமான குற்ற செயல் களை செய்தவர்கள் பிரிட்டிஷ் காரனகள், அதை எல்லாம் ஆவண படமெடுத்து உலகிற்கு BBC அறிமுக படுத்தட்டும், இவர்கள செய்த குற்றங்களை மறைந்து, ஹிட்லரை குற்றவாளி யாக சித்தரித்தார் கள்... குறிப்பாக கேரளாவில் வரி என்ற பெயரில் மலை வரியும் விதித்து மக்களை கொடுமை படுத்தி விட்டு, அந்த பழியை மன்னர் மேல் சுமத்தி விட்டார்கள்
இந்தியா அதிபர் ஆட்சி முறைக்கு மாறவேண்டும் .....மொழிவாரி மாநிலங்களுக்கு பதில் , பத்து மாகாணங்கள் /பிராந்தியங்களாக பிரிக்கப்படவேண்டும் .
மக்கள் பார்த்துவிட்டுத்தான் போகட்டுமே. என்ன கெட்டுபோச்சுது? அவர்களுக்குத்தான் பிரதமரை நன்றாக தெரியுமே. நம்பமாட்டார்கள். ஏன் இதை இந்த அளவுக்கு தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்? சென்ட்ரல் நீதிமன்றமே பிரதமருக்கு ஷீட் கொடுத்தபிறகு இந்த பயம் தேவையா? ஒருவேளை ஏதாவது வில்லங்கம் இருக்குமோ......
இந்த ஆவணப்படத்தை மக்கள் பார்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை இன்னும் சொல்ல போனால் பிஜேபிக்கு மேலும் ஆதரவு கூடலாம் ஆனால் இந்த ஆவணப்படத்தால் சமூக அமைதி கேட்டால் யார் பொறுப்பு ? இன்றைய சூழலில் தேசத்தின் வளர்ச்சி தான் முக்கியம் மதக்கலவரம் வெறுப்பும் முக்கியம் இல்லை அதனால் இந்த ஆவணப்படத்தை தடை செய்தது மிக சரியான செயலே.
இந்தியா சுதந்திரம் அடைந்தாள் நெல்லிக்காய் மூட்டை போல் சிதைந்து விடும் என்று சர்ச்சில் சொன்னார் ஆனால் 70 வருடங்களாக இந்தியா ஒரே தேசமாக வாழ்வது மட்டும் இல்லாமல் மேலும் மேலும் வலிமை அடைந்து இன்று இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் மிக பெரிய சக்தியாக வளர்ந்து நிற்கிறது. இது இங்கிலாந்திற்கு மட்டும் அல்ல பாக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் மிக பெரிய அதிர்ச்சியாக உள்ளது அதனால் இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்த அவர்கள் மீண்டும் ஹிந்து முஸ்லீம் பிரிவினையை விதைக்கிறார்கள்
கேரள ஒரு பாவ பட்ட பூமி சொந்த ஊரில் வாழ வழியில்லாத பல லட்சம் கேரள மாநில மக்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிடைத்த வேலை செய்து சோத்துக்கு தங்கள் உழைப்பின் மூலம் வழி செய்து வந்த நிலையில் உள்ளூர் கம்யூனிஸ்ட் அரசியல் வாதிகள் தானும் வளராமல் உள்ளூர் மக்கள் உருப்படாமல் செய்த பெருமை உண்டு. ஆக கேரளா அரசு விளம்பரம் செய்தது போல கடவுளின் தேசம் அல்ல கேரளா. இருக்கிறவனிடம் புடுங்கும் தேசம்.