செயின்ட் லுாயிஸ் பள்ளி வைர விழா
சென்னை, செயின்ட் லுாயிஸ் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான பள்ளியின் வைர விழா, சிறப்பாக நடந்தது.
அடையாறு, செயின்ட் லுாயிஸ் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான பள்ளியின் வைர விழா, நேற்று நடந்தது. அப்போது, செயின்ட் லுாயிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, காணொலி வழியாக விளக்கப்பட்டது.
இதில், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று, நிறுவன பணியாளர்களை கவுரவித்து, சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, இத்தாலி நாட்டில் உள்ள செயின்ட் கேப்ரியல் மாண்ட்போர்டின் சுப்பீரியர் ஜெனரல் ஜான் கல்லறக்கல், திருச்சி மண்டல சுப்பீரியர் ஜெனரல் இருதயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி நிர்வாகத்தினர் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!