ADVERTISEMENT
சென்னை :மதுரையில் இருந்து, இரண்டு மணி நேரத்தில் சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இதயம், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த 32 வயது நபர், விபத்தில் சிக்கி படுகாயம்அடைந்தார்.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமளிக்க, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு, இதயம் பொருத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, மதுரையில் இருந்து விமானம் வாயிலாக, 1:45 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு, இதயம் கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு 15 நிமிடத்தில் இதயம் கொண்டு வரப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு, இரண்டு மணி நேரத்தில் இதயம் கொண்டு வர உதவியாக இருந்த சென்னை காவல்துறை மற்றும் டாக்டர்களுக்கு, அம்மருத்துவமனை நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!