ADVERTISEMENT
'ஏஐ' எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் வரையப்படும் படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஜெயேஷ் சச்தேவ் என்பவர் ஏஐ மூலம் வடிவமைக்கும் படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் நாய்கள், குரங்குகள், பூனைகள், பச்சோந்திகள் போன்ற பல வகையான உயிரினங்கள் இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும் என ஏஐ-யை வைத்துக் கொண்டு கற்பனையில் விளையாடியுள்ளார். அதில் ஒன்று தான் மேலே உள்ள பூனையார் குடும்பம்.
இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரது ப்ரொபஷனல் பக்கமான, 'குயிர்க் பாக்ஸ்' (Quirk box) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஜெயஷ் வெளியிட்டு வருகிறார். ஏஐயை பயன்படுத்தி கற்பனையாக விண்வெளி வீராங்கனைகளை மணக்கோலத்தில் வடிவமைத்து இதில் குறிப்பிடும்படியானது ஆகும்.

அதில் அவர் விவரித்த வெள்ளை நிற பூக்கள், விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட், இந்தியாவின் பாரம்பரிய நகைகள், போன்றவை அவரது படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!