தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி, முதல்வருக்கு தலைவலியை கொடுத்து வருகின்றனர். அரசு பஸ்களில் பெண்கள் இலவசப் பயணம் செல்வதை, 'ஓசில தானே போறீங்க...' என பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சர்ச்சை
வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன், மனு கொடுக்க வந்தவரை, அதே மனுவால் தலையில் அடித்ததும், தன்னை சந்திக்க வந்த எம்.பி., உட்பட சிலரை நிற்க வைத்தே பேசியதும், அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மூத்த அமைச்சரான நேரு, அரசு நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஒருவரை தலையில் ஓங்கி அடிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வலம் வந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில் தற்போது, பால்வளத் துறை அமைச்சர் நாசரும் சேர்ந்துள்ளார். ஏற்கனவே அவர் மீது, கட்சியினரை ஒருமையில் பேசுவதாகவும், திட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், கட்சி தொண்டரை கல்வீசி தாக்கும் அளவுக்கு, அவர் நேற்று, கடும் கோபத்துடன் செயல்பட்டார்.
அவரது நடவடிக்கையை, தரம் கெட்ட செயல் என்று, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.
தி.மு.க., சார்பில், மொழிப்போர் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வீரவணக்க நாள் கூட்டம் நடத்தப்படும்.
இந்த ஆண்டும், அனைத்து மாவட்டங்களிலும், இன்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
கண்டனம்
அதையொட்டி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், திருவள்ளூர் - -ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேடை அமைக்கும் பணி, நேற்று நடந்தது. இப்பணிகளை, பால்வளத் துறை அமைச்சர் நாசர் நேற்று பார்வையிட்டார். அதிகாரிகள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது, நிர்வாகிகள் அமர, அங்கிருந்த தொண்டர்களிடம், நாற்காலி எடுத்து வருமாறு, அமைச்சர் நாசர் கூறினார்.
நாற்காலிகளை எடுத்து வர தாமதம் ஆனதாலும், குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை எடுத்து வந்ததாலும், அமைச்சர் நாசர் ஆத்திரம் அடைந்தார். உடனே, கீழே கிடந்த கல்லை எடுத்து, தொண்டரை நோக்கி எறிந்தார்; கடும் கோபத்தில், வேகமாக நாற்காலிகளை எடுத்து வரும்படி திட்டினார்.
ஆத்திரத்துடன் அவர் தொண்டர் மீது கல் வீசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அமைச்சரின் செயல் கண்டு, அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் என்ற உணர்வு கூட இல்லாமல், பொது வெளியில், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், கீழே கிடந்த கல்லை எடுத்து, அவர் தொண்டர் மீது வீசியது, கடும் கண்டனத்தை கிளப்பி உள்ளது; அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சட்டம் - ஒழுங்கை பேணி காக்க வேண்டிய முதல்வர், இதுபோன்ற செயல்களை தடுப்பதை, தன் முதல் கண்ணாக கருதி கடும் நடவடிக்கை எடுப்பாரா என, பொது மக்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (53)
எது எப்படியோ விளையாட்டு மந்திரிக்கு வினையாகிவிட்டது
THIRUTU DRAVIDAM, USELESS DRAVIDA MODEL
அப்போது சொனதுக்கு கடமைய்ய கண்ணியம் கட்டுப்பாடு. சாந்தி சிரிக்குது.. இப்போர் சொல்லுவது கள்ளம் கயமை கல்வீச்சு இது தான் தாராக மந்திரம். மரம் வேட்டிக்கு போட்டி பிரியாணி கடை சூரைய் ஆடுவதில் சூரர்கள் வல்லவர்கள்
கடமை, கண்ணியம், கல்லெறிதல்.
இவனுங்க எப்ப தரமா நடந்து இருக்காங்க