புதுடில்லியில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெறும். கடந்த ஆண்டு, தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற சர்ச்சை கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெயர் பலகை
இந்த ஆண்டு, இது போன்ற சர்ச்சையை தவிர்க்க மத்திய அரசு கவனமுடன் செயல்பட்டது. மத்திய அரசு, பரிந்துரை செய்த பெண் வலிமை என்ற கருத்துருவை தமிழக அரசு தங்களின் ஊர்திக்காக தேர்வு செய்தது.இதன்படி, தஞ்சை கோவில் பின்னணியில், தமிழக பெண் பிரபலங்களான, அவ்வையார், வேலு நாச்சியார், தஞ்சை பால சரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் சிலைகளோடு, இயற்கை விவசாயி பாப்பம்மாள் என்பவரது சிலையும் தமிழக அரசின் ஊர்தியில் இடம் பெற்றுள்ளன.

வேதனை
இதையடுத்து, தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு என்ற வார்த்தை ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளதாகவும், தமிழில் எழுதப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.ஆனால், ஊர்தியின் முன்பக்கத்தில் ஹிந்தியிலும், பின்பக்கத்தில் ஆங்கிலத்திலும், இரண்டு நீளமான பக்கவாட்டு பகுதிகளில் தமிழிலும் பெயர் பலகைகள் உள்ளன. நேற்றைய ஒத்திகை அணிவகுப்பில், அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியாகியுள்ள போட்டோக்களில், முன்பக்க ஹிந்தியில் உள்ள தமிழ்நாடு பலகை மட்டுமே தெரிந்தது.
இதை வைத்து தவறான செய்திகள் வெளியாகின.'இரண்டு பக்கவாட்டுகளிலும், தமிழில் தமிழ்நாடு என்ற பெயர் பலகை இடம் பெற்றுள்ளது. 'இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல், வழக்கம்போல தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் ஹிந்திக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது வேதனையளிக்கிறது' என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-நமது டில்லி நிருபர் -
வாசகர் கருத்து (19)
அழங்கார ஊர்தியின் முன்னாலும் பின்னாலும் மற்ற வாகனங்கள் தொடர்ந்து வரும். அதனால் முன்புறமும் பின்புறமும் எழுதப்பட்டவை சரியாக தெரியாது. பார்வையாளர்கள் ஊர்தியின் செல்லும் வழியில் பக்கவாட்டில் அமர்ந்து இருப்பதால், அணிவகுப்பின் பக்கவாட்டு பகுதி மட்டுமே நன்றாக தெரியும். அதனால் பக்கவாட்டில் எழுதப்பட்ட தமிழ் மொழி நன்றாக தெரியும் இந்த இராஜ தந்திர தெரியாமல் புரளி கிளப்புராங்க கமன்ட் போடுராங்க 😏
தமிழக அரசின் விருப்பப்படி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு வழக்கம் போல் உண்மைக்குப் புறம்பாக குற்றம் சாட்டுவது திராவிட மாடல் அரசின் கருத்தைப் பிரதிபலிக்கிறதும்
இப்பவும், தமிழ் பக்கவாட்டில்தான் நின்று வேடிக்கை பார்க்கவேணும். தலைவிதி.
upon a time the aux carried their state language in front and Hindi/langage on the sides. Now it's Hindi and Only Hindi. How is dinamalar conveniently forgetting
அழங்கார ஊர்தியின் முன்னாலும் பின்னாலும் மற்ற வாகனங்கள் தொடர்ந்து வரும். அதனால் முன்புறமும் பின்புறமும் எழுதப்பட்டவை சரியாக தெரியாது. பார்வையாளர்கள் ஊர்தியின் செல்லும் வழியில் பக்கவாட்டில் அமர்ந்து இருப்பதால், அணிவகுப்பின் பக்கவாட்டு பகுதி மட்டுமே நன்றாக தெரியும். அதனால் பக்கவாட்டில் எழுதப்பட்ட தமிழ் மொழி நன்றாக தெரியும் இந்த இராஜதந்திரம் தெரியாமல் புரளி கிளப்புராங்க கமன்ட் போடுராங்க 😏