கட்சி நிர்வாகியை கல்லைக் கொண்டு எறிந்த அமைச்சர் நாசர்: வீடியோ வைரல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அருகே முதல்வர் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள், குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜனவரி 25ம் தேதியான நாளை மொழிப்போர் தியாகிகளுக்காக திருவள்ளூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர்., அருகில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி இருக்கையை மெதுவாகவும், ஒரு இருக்கை மட்டும் எடுத்து வந்துள்ளார்.
இதை கண்டதும் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசினார். இதனால் கட்சி நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வாசகர் கருத்து (82)
இதே ஜெ அம்மா இருந்தால் .....அவரது அமைச்சர் ஒருவர் இது போல . கட்சி தொண்டர் மீது இப்படி கல் வீசி இருந்தால் ....அடுத்த நாளே அந்த அமைச்சர் சீட்டு கிழிந்து இருக்கும் ....இரும்பு பெண்மணி அவர். ஆனால் விடியல் தலைவர் ஆட்சியில் ??? இங்கு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தான் உள்ளது....அவருக்கு கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தவும் தெரியாது !!!!
அப்போது, அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளைச் சொன்னாரே, அது பற்றி யாரும் குறிப்பிடவில்லையே !
நேரு அடி, இப்போ கல் எறிதல் எல்லாம் திராவிட மடல்...இதுங்களுக்கு என்றே ஒரு தனி ஒலிம்பிக்ஸ் நடத்தலாம். (டோரா முருகன் சட்டசபை மேஜையில் வேட்டியை அவிழ்த்து ஆடியது அந்த கால கோல்ட் மெடல்)
திம்க கட்சியில் இதெல்லாம் சகஜமப்பா? கே.என். நேரு ஒரு தொண்டரை தலையில் அடிப்பது, கவர்னர் வெளிநடப்பு செய்த போது போய்யா,,, போய்யா என்று கையைக் காட்டியது,சென்னை மேயர்- பாவம் ஒரு விழா முடிந்த பின் ஒரு அமைச்சர் அட அந்தப் பக்கமா போம்மா, என்று சொன்னது, இப்போது ஒரு அமைச்சர் கல்லால் எறிவது இன்னும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனை எத்தனையோ ஆனால் எந்த நாளாவது தொண்டர்களுக்கு ரோஷம் வந்து விட்டால் சாது மிரண்டால் கதை போல் ஆகிவிடும். திரு ஸ்டாலின் அவர்களே விழித்துக் கொள்ளுங்கள். மந்திரிகள் என்ன செய்தாலும், குற்றம் முதலமைச்சராகிய உங்களையே சேரும்
கல் எறிவது அமைச்சர் மார்க்கத்தில் முக்கியமான ஒன்று...தொட்டில் பழக்கம் ....அதை மாற்ற முடியாது