Load Image
Advertisement

ரூபாய் நோட்டை எண்ணத் தெரியாத மாப்பிள்ளை அதிரடியாக திருமணத்தை நிறுத்திய மணமகள்

Tamil News
ADVERTISEMENT
லக்னோ, உத்தர பிரதேசத்தில், 10 ரூபாய் நோட்டைக் கூட எண்ணத் தெரியாமல் திணறியவரை மணம் முடிக்க மறுத்து, மணமகள் திருமணத்தை நிறுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் பகுதியைச் சேர்ந்த பெண், ரீடா சிங், 21. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, 23 வயதான நபருடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

சமீபத்தில் இவர்கள் திருமண நாளன்று ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்தன. அப்போது, 'மணமகன் இயற்கைக்கு மாறுபட்ட வித்தியாசமான குணம் உடையவர். போதிய படிப்பறிவு இல்லாதவர்' என, மணமகள் வீட்டாரிடம், சிலர் புகார் தெரிவித்தனர்.

திருமணத்துக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், இந்த விவகாரம் மணமகள் கவனத்துக்குச் சென்றது. இதையறிந்த மணமகன் வீட்டார், திருமணத்தை முடிக்கும்படி அவசரப்படுத்தினர்.

இதையடுத்து, 'மணமகனுக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். அதில் தேர்வாகி விட்டால், அவரையே திருமணம் செய்து கொள்கிறேன்' என கூறிய ரீட்டா சிங், மணமகனிடம், 10 ரூபாய் நோட்டுகள் சிலவற்றை கொடுத்து, அதை எண்ணி, மொத்த தொகை எவ்வளவு என தெரிவிக்கும்படி கூறினார்.

ஆனால், அந்த ரூபாய் நோட்டுகளை எண்ண முடியாமல் மணமகன் திணறினார். இதையடுத்து, 'இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்' என கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டு, மணமகள் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

இதனால், மணமகன் - மணமகள் வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், போலீசார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்த முயன்றனர்.

ஆனால், திருமணத்தை நிறுத்துவதில் மணமகள் உறுதியாக இருந்தார். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.


வாசகர் கருத்து (10)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  சொந்தக்காரர்களுக்குத் தெரியாதா அவர்கள் பிள்ளை லட்சணம்? பெண் வீட்டார் காதுக்கு எட்ட வைத்திருப்பார்கள் பெண் விழித்துக்கொண்டுவிட்டார் எண்கள் உறவில் ஒரு,திருமணம் வந்திருந்த மணமகனின் உறவினர் ‘எட்டு கூட முடிக்காத இவனுக்கு,இத்தனையையா? என்று கூறினார். பிள்ளை படித்தது,தெரிந்துவிட்டது ஆனால்,மானம், மரியாதை என்று திருமணம் முடிந்துவிட்டது பெண் நல்ல வேலையில் இருந்ததால் குடும்பம் நிமிர்ந்தது எல்லாரும் இப்படி கல்யாணத்தை நிறுத்த முடியுமா ?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  என்னம்மா இது ஒரு தப்பா ??உனக்கு கணவரா வரப்போகிறவர் அரசியலில் சேர்ந்தா நிறையா சம்பாதிக்கலாம் ,எண்ணத் தெரியலேன்னா எதுவும் குடிமுழுகிடாது பணத்தை எண்ணுகின்ற மிஷினை வாங்கி வைத்துவிட்டால் பிரச்சனையே தீர்ந்துவிடும் ,அதுவே பணத்தை எண்ணிக் கணக்கை சரியாக சொல்லிவிடும் ,

 • Alagu Muthusamy - BANGALORE,இந்தியா

  ஏன் முதலில் மாப்பிள்ளை படிக்க வில்லை என்பதை மறைத்தார்கள். இப்படி அவமானப் படுவானேன். தமிழகத்தில் குடிகாரர் அதனால் மாப்பிள்ளை வேண்டாம் என்று மணப் பெண் திருமணத்தை நிறுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அரசியலில் சேர்ந்து பல கை நாட்டுக்கள் எல்லாம் பல நூறு கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆயிட்டாங்க ,என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா...???பணத்தை எண்ணத் தெரியாதது ஒரு குற்றமா ???

 • BALU - HOSUR,இந்தியா

  மணமகளின் துணிச்சலான புத்திசாலித் தனமான முடிவு மிகவும் பாராட்டபட வேண்டியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement