Load Image
Advertisement

பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த மஹா., கவர்னர்

Resignation: Governor expressed his wish to the Prime Minister   பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த மஹா., கவர்னர்
ADVERTISEMENT

மும்பை: பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளாக மஹாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.


மஹாராஷ்டிர மாநில கவர்னராக இருப்பவர் பகத் சிங் கோஷ்யாரி. இவர் தற்போது தனது பதவியில் இருந்த விலக விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம்மிக்க போராளிகளின் பூமியான மஹாராஷ்டிரா போன்ற ஒரு சிறந்த மாநிலத்தின் கவர்னராக பணியாற்றுவது எனக்கு ஒரு முழுமையான மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுகிறேன். மஹா., மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு அளித்த அன்பை என்றும் மறக்கமாட்டேன்.

Latest Tamil News
பிரதமர் மோடி சமீபத்தில் மும்பை வந்திருந்தபோது அவரிடம் அனைத்து அரசியல் பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, எனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுத்து மற்றும் பிற செயல்பாடுகளில் செலவிட விரும்புவதாக தெரிவித்தேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கவர்னர் பொறுப்பில் இருந்து அவர் விரைவில் ராஜினாமா செய்வார் அல்லது அவரை மத்திய அரசு விடுவிக்கும் எனத் தெரிகிறது. கவர்னர் பதவியில் இருந்து கோஷ்யாரி திடீரென விலக விரும்புவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (11)

  • அப்புசாமி -

    கெவுனர் பதவி ரிடையர்டு ஆளுங்களுக்கு தரப்படும் சுகமான பதவி. வாயை வெச்சிக்கிட்டு சும்மா இல்லாம பேசினா...

  • morlot - Paris,பிரான்ஸ்

    O.k Ravi ,you can candidate for this post,better go to Mumbai from Chennai. It is a better place ,not very far from your native place

  • ஆரூர் ரங் -

    வீர சிவாஜி பற்றி ஏடாகூடமாக பேசி வம்பில் மாட்டிக் கொண்டு திண்டாட்டம்.🤔 அதனால் ராஜினாமா. உண்மை இதுதான்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    கிடைக்கும் வரையில் ஒட்டிக்கொண்டு, வாய்ப்பு கிடைத்தால் அடுத்த மாநில கவர்னர் பொறுப்பையும் ஏற்று பதவி சுகம் காணும் இன்றய நிலையில் ... தானாக முன்வந்து பதவிலக நினைக்கும் இவர் உண்மையிலேயே வணங்கத்தக்கவர்..

  • saravana -

    everything priminister will not do. report to president.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்