'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்., சார்பில், என் இளையமகன் சஞ்சய்சம்பத் போட்டியிடுவார்' என, அவரது தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன், நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டிற்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றார். அவரை இளங்கோவனும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் வரவேற்றனர். அப்போது, இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து, தன் மகன் போட்டியிடும் முடிவை மாற்றி, தானே போட்டியிடுவதாக, டில்லி மேலிடத்தில் தெரிவித்ததும், இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இளங்கோவன் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றால், சட்டசபையில் கூட்டத்தொடரில் நன்றாக பேசுவார் என்றும், எதிர்கட்சியினருக்கு, நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் பதிலடி தந்து, சபையை கலகலப்பாக வைத்திருப்பார் என்றும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்., சார்பில், என் இளையமகன் சஞ்சய்சம்பத் போட்டியிடுவார்' என, அவரது தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன், நேற்று முன்தினம் அறிவித்தார்.சஞ்சய் சம்பத், அரசியலுக்கு புதுமுகம் மட்டுமல்ல; கட்சி பணிகளிலும் ஈடுபடாத தொழிலதிபர் என்பதால், அவருக்கு பதிலாக இளங்கோவன் தேர்தலில் நிற்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டிற்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றார். அவரை இளங்கோவனும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் வரவேற்றனர். அப்போது, இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, தன் மகன் போட்டியிடும் முடிவை மாற்றி, தானே போட்டியிடுவதாக, டில்லி மேலிடத்தில் தெரிவித்ததும், இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இளங்கோவன் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றால், சட்டசபையில் கூட்டத்தொடரில் நன்றாக பேசுவார் என்றும், எதிர்க்கட்சியினருக்கு, நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் பதிலடி தந்து, சபையை கலகலப்பாக வைத்திருப்பார் என்றும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (31)
திமுக சோத்துக்கு பதிலா வேறு எதையாவது திங்க சொன்னாலும் சோனியா காங்கிரெஸ்க்காரன் தின்பான் .
இளங்கோவன் ராசியற்றவர் .தீ மு கா விற்கு அதில் நம்பிக்கையயை இல்லை . ஆனால் கோபால புறம் வீடு அம்மாவிற்கு இதில் முழு நம்பிக்கையயை உண்டெ என்ன செய்ய போகிறாரக்ள் .சில நாள் கழித்து மறுபடியும் ஸ்டாலின் அவர் வீட்டிற்கு சென்று இளங்கோவான் மகனையென நிற்க சொல்லுவாரோ?
அப்போ இலங்கோவனுக்கு தேர்தல் நிதி ஸ்டாலினே பார்த்து கொள்வார். ஆனால் ஜாக்ரதை. அண்ணாமலை ஏதாவது கிண்ட போகிறார்.அப்புறம் ஆப்பயை பிடுங்கின குரங்க்கு கதையாக போகிறது. .தேர்தல் பிரச்சாரத்திற்கு குசுபூ வரமாட்டார் நாஹக்குமா வருவாரா?இவர்கள் வந்தால் இலங்கோவனுக்கு இரட்டிப்பு சந்தோஸம்
இவன் வாயை தொறந்தாலே ..
வாரிசு அரசியல் என்று முத்திரை பாதிக்காமல் இருக்கவே இளங்கோவன் நிற்கிறார். என்னதான் அவர் காங்கிரெஸ்சில் இருந்தாலும் திராவிட வாசம் உள்ளவர். திமுக சின்னத்தில் நின்றாலும் ஆச்சர்யமில்லை. மக்கள் உண்மையில் அறிவுடன் சிந்தித்து ஒட்டு அளித்தால் தோல்வி நிச்சயம்.