சென்னை : சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின், 150ம் பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழக அரசு வெளியிட்டுள்ள சிறப்பு மலரில், வ.உ.சி.,யின் ஒரிஜினல் கையெழுத்தில் உள்ள, 'பிள்ளை' என்ற சொல்லை நீக்கி அச்சிட்டிருப்பது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின், தமிழரசு பத்திரிகை அலுவலகத்தில் அச்சிடப்பட்ட இந்த சிறப்பு மலர், 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிறப்பு மலரின் முதல் பக்கத்தில், வ.உ.சி படத்துடன், அவரது ஒரிஜனல் கையெழுத்தில், 'பிள்ளை' என்ற சொல்லை நீக்கி, 'வ.உ.சிதம்பரம்' என அச்சிட்டுள்ளனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில், சிலர் கூறியிருப்பதாவது: வ.உ.சி., தன் வாழ்நாள் முழுதும், 'வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்றே கையெழுத்திட்டு உள்ளார். அதை ஆவணங்களில் காணலாம். அதே சிறப்பு மலரில், அவர் எழுதிய புத்தகத்தின் முதல் பக்கத்தை அச்சிட்டுள்ளனர். அதில், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்றே உள்ளது.
ஆனால், தமிழக அரசு பணியில் உள்ள, மெத்த படித்தவர்கள், 'பிள்ளை' என்ற அவரது பட்ட பெயரை வேண்டும் என்றே நீக்கம் செய்து, அவரது அடையாளத்தை மறைத்துள்ளனர். ஜாதியின் பெயரை, அரசு குறிப்பிடுவதில்லை என்று சாக்குபோக்கு சொல்லக்கூடும். இவை எல்லாம், 2000ம் ஆண்டுக்கு பின் வந்த அரசின் உத்தரவுதான்.
இது வாழ்ந்து மறைந்த தலைவர்களுக்கு எப்படி பொருந்தும்? இதுபோல மற்ற தலைவர்களின் பெயர்களில் உள்ள பட்ட பெயர்களை அரசு நீக்குமா? சிறப்பு மலர் தயாரித்தவர்களின் விஷமத்தனத்தை, தமிழக முதல்வர் புரிந்து, அவர்களை திருத்த முன் வர வேண்டும். இவ்வாறு, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (54)
பாளையம்கோட்டையில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரால் அமைந்துள்ள பல்கலை கழகமும் சுந்தரனார் பல்கலை கழகம் என்று தான் அழைக்கப்படுகிறது. அதுவும் கருணாநிதி செய்த மாற்றம் தான். வ வு சிதம்பரனார் என்று போடலாமே. சிதம்பரம் என்பதற்கு பதிலா.
அரசியல் எரிச்சலூட்டும் போல. தேவையற்றதை செய்கிறார்கள் அந்த மெத்த படித்தவர்கள். சென்னையில் ஜி என் செட்டி தெருவை கோபத்தி நாராயண என்று மட்டுமே வைத்துவிட்டார்கள் இப்போது. ஆனால் முத்துராமலிங்கத்தேவர் பெயர் அப்படியே இருக்கிறது என்கிறார்கள். கோயம்புத்தூரில் மாநகராட்சி அலுவகத்திற்கு அருகிலேயே அண்ணா சிலைக்கு மிக அருகாமையில் உள்ள அந்த அழகான குடியிருப்பு தெருவின் பெயர் இன்றும் ஜி டி நாயுடு தெரு தான். ஆனால் தூத்துக்குடியில் அனைத்து தெருக்களிலும் தலைவர்கள் பெரியவர்கள் பேயால் இருக்கும் தெருவில் சாத்திய பெயர் என்று சொல்லப்படுகின்ற குடும்பத்து பெயரை நீக்கி விட்டிருக்கிறார்கள். எஸ் எஸ் தெரு என்று தான் இருக்கிறது அங்கே காந்தி சிலைக்கு அருகாமையில் இருக்கும் மிக முக்கியமான எஸ் எஸ் பிள்ளை தெரு. தூத்துக்குடியிலேயே பிள்ளை என்ற பெயரை நீக்கி விட்டார்கள். வடமாநிலத்தில் சென்று பாருங்களேன் அப்படியே குலப்பெயரிலும் ஜாதிப்பெயரிலும் இருக்கிறார்கள். ஆந்திராவிலும் அப்படியே. நரசிம்ம ராவ் முதல் மன்மோகன் சிங் வரை சொல்லலாம். அதே போல காந்தி என்ற பெயரில் இன்றும் காங்கிரசின் தலைவர்கள் இருக்கிறார்கள். பானெர்ஜி, நாயுடு யாதவ் என்று அனைத்திலும் அப்படியே இருக்கிறது ஜாதியின் பெயர். பஞ்சாபில் சிங் என்பதும் கௌர் என்பதும் ஆண்பெண் அடையாளமாக இருக்கிறதே. பெர்னாண்டஸ், ராவுத்தர், மரைக்காயர் என்ற பெயர்களை மற்ற மதத்தில் காணலாம் குடும்ப சாத்திய பெயராக. பேருந்துகளை ஒருகாலத்தில் அடித்து நொறுக்கினார்கள் சில சில்மிஷ ரவுடியிசம் செய்பவர்கள். ஜாதி தலைவர்களின் பெயரால் இயங்கிய பேருந்து கழகங்கள் என்று யார் சொல்லிவிட அந்த மெத்த படித்தவர்கள் கடைசியில் அனைத்து பேருந்துகளுக்கும் பெயரை மாற்றிவிட்ட்டார்கள். திருவள்ளுவர் பேருந்து அய்யன் பேருந்து என்று கூட மாற்றப்படவில்லை. தமிழகத்தின் பெயராலும், மருதுபாண்டியர், பாண்டியர், பல்லவன் போன்ற பேருந்துகள் கூட நகரங்களின் பெயரால் மாற்றப்பட்டுவிட்டது. கலவரம் செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருந்தால் அன்றே பிரச்சினை முடிந்திருக்கும். எதை செய்யவேண்டுமோ அதை சரியாக செய்யாமல் மாற்றி யோசித்து குழப்பிவிட்டார்கள். எனக்கு எனோ வஉசியின் கையொப்பத்தின் சில தமிழ் எழுத்துகளை டெலிட் செய்து விட்டார்கள் என்று தெரிகிறது. இப்படியும் சொல்லலாமா?
வேறு எதையோ மறைப்பதற்கு திசை திருப்பும் முயற்சி - அந்த வலையில் எல்லோரும் விழுந்து விட்டார்கள்.. ஆக மொத்தம் வெற்றி
ஜாதிகள் நிலைத்து நிற்பதே அசியல் கட்சிகளால் தான்..
சுதந்திரப் போராட்டத்தில் நிகரற்ற தலைவர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே வீரர் விடுதலைக்காக போராடி சிறையில் சென்று புத்தகங்கள் எழுதிய தலைவர்களுக்கு மத்தியில் மாடு கூட இழுக்க முடியாத செக்கை இழுத்து பல துயரங்களை அனுபவித்த ஒரு உண்மை தியாகி அடையாளங்களை மறைக்கவே இந்த வேலை இந்த அரசு தமிழர்களுக்கான அரசு இல்லை தோற்றுப் போன அரசு வரும் தேர்தலில் பாடம் கற்பிப்போம்