Load Image
Advertisement

கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை: பிரதமர் மோடி எச்சரிக்கை

சென்னை--'வரும் 2024 லோக்சபா தேர்தலில் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என, பா.ஜ.,வினருக்கு, பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Latest Tamil News

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், ஜனவரி 16, 17 தேதிகளில் டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு முக்கியத்துவம் ஒன்றாக மாறியுள்ளது.

வரும் 2024 லோக்சபா தேர்தலில், மோடியே பிரதமர் வேட்பாளர்; பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் பதவிக் காலம், 2024 ஜூன் வரை நீட்டிப்பு ஆகிய முக்கிய முடிவுகள், இந்த செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தல்விரைவில் நடக்கவுள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய, ஒன்பது மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தல் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

செயற்குழுவில் நட்டா பேசியுள்ளதாவது:

இது நமக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாநிலங்களில், ஆறில் நாம் ஆட்சியை தக்க வைக்க வேண்டும். ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்நாடகாவில் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஹிமாச்சலில் வெறும் ஒரு சதவீதம் அதாவது 37 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருக்கிறோம். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

கூட்டணி இல்லாததால் பீஹார், மகாராஷ்டிராவிலும்; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வாய்ப்புள்ளதால் உ.பி.,யிலும்; நவீன் பட்நாயக் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருவதால் ஒடிசாவிலும் எதிர்கொள்ள வேண்டிய சவால் குறித்தும், செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைசெயற்குழுவில் பிரதமர்மோடியின் பேச்சும், லோக்சபா தேர்தல் குறித்தே இருந்தது.

'பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஆதரவை பெற முயற்சிக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்த மோடி, முஸ்லிம், கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் பா.ஜ.,வை ஆதரிக்க தயாராக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

செயற்குழுவில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர்கள், மாநில அமைப்பு பொதுச்செயலர்கள், தேசிய பொதுச்செயலர்கள், அணிகளின் தேசிய தலைவர்களிடம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோர், தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அப்போது மோடி கூறியுள்ளதாவது:

கடந்த 2014-ல் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், 2019-ல் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்காது என்றும் நமது சித்தாந்த எதிரிகள் நினைத்தனர். ஆனால், இப்போது பா.ஜ.,தான் வெற்றி பெறும் என, நம் எதிரிகள் முழுமையாக நம்புகின்றனர்.

அதனால், தங்களது முழு பலத்தையும் வரும் தேர்தலில் பயன்படுத்துவர். எனவே, 2014, 2019 தேர்தலை விட, 2024-ல் நாம் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சர்வதேச சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெளி சக்திகள் நமக்கு எதிரான வேலைகளை, ஏற்கனவே துவங்கி விட்டன.
Latest Tamil News

ஆவண படம்எனவே, வரும் ஓராண்டில் நாம் கொடுக்கும் உழைப்புதான், 2024 ஜூனுக்கு பிந்தைய ஐந்தாண்டுகளுக்கு பா.ஜ.,வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இதை உணர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மோடி அப்படி பேசிய அன்றைய தினமே, இந்தியாவிலும் செயல்படும் சர்வதேச ஊடகம் ஒன்றில், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படம் வெளியானது.

'இது, சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் முயற்சி' என வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.,வின் சித்தாந்த எதிரிகள், 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கி விட்டதை, இந்த ஆவணப் படம் வெளிப்படுத்துவதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (24)

 • v.sriram - chennai,இந்தியா

  Modi ji face value plus 10 years Transparent works delivers to max levels if RSS VHP BJP Members works every corner in Barath soil victory is assured as HATRICK Rule in center.

 • venugopal s -

  வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரிய ஆப்பு காத்துக் கொண்டு இருக்கிறது!

 • Sampath Kumar - chennai,இந்தியா

  கடும் சவால்களை சந்திக்க தான் போறீங்க பிஜேபி மண்ணை கௌவுவது உறுதி

 • பாரதி -

  அருமை. உண்மை. நல்ல உழைப்பு தேவை.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  வீட்டுக்கும் கடும் சவால்தான் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்