அரியலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணாதுரை சிலை முன்பு நேற்று இரவு எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அரியலுார் மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க., இடைக்கால பொது செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
தேர்தல் நேரத்தின்போது ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய் வாக்குறுதி கொடுத்தார்.
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என உதயநிதி பொய் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், தற்போது, தமிழகத்தில் 20 மாத கால ஆட்சியில் நீட் தேர்வால் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு பேசுகிறார். தற்போது வேறு மாதிரியாக பேசிகிறார்.
தி.மு.க., ஆட்சியில் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் தான் நடைபெற்று வருகிறது. நல்ல கலெக்சன் கொடுக்கும் அமைச்சர்களே ஸ்டாலினுக்கு சிறந்த அமைச்சர்கள். கமிஷன், கலெக்சன், கரப்சன் மட்டுமே தி.மு.க., அரசின் ஒரே நோக்கம். அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களை ஸ்டாலின் தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றாதீர்கள். 20 மாத கால ஆட்சியில் என்ன செய்து கிழித்தீர்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய குடிமராமரத்து திட்டத்திற்கு தி.மு.க., ஆட்சி மூடு விழா கண்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியது அ.தி.மு.க., அரசின் சாதனை. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை தி.மு.க., அரசு வஞ்சித்து விட்டது. ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட்டால் தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
முதியோர் உதவி தொகையை நிறுத்தியது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. தி.மு.க., ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. சினிமா துறையிலும் உதயநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் நிறுவனம், 120 படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். அதில்தான் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (8)
டீசல் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்பது மோடி அரசின் சாதனை....ஆனால் இந்த விடியாத அரசில் நேற்று தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்ல TVM என்னும் பஸ்ஸில் ரூபாய் 40 இல் இருந்து 45ய் எந்தவித மும் அறிவிப்பும் இன்றி உயர்த்தி கொள்ளை ...இதுவும் ஒரு சாதனை தானே....
சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி எல்லாத்தையும் ஏத்தி, கட்டிட பொருள் களில் இருந்து காய்கறிகள் விலை எத்தி, நித்தம் ஒரு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லாக்கப் மரணம் கலவரம் என்று சட்டம் ஒழுங்கில் நம்பர் ஒன்னு என்று நடை போட்டு கொண்டு இருப்பதும் இந்த திமுக அரசின் சாதனை தானே......
அரியலூர் மாவட்டத்தில் சரியான பேருந்து போக்குவரத்து வசதிகளே இல்லை ,சிமெண்ட் சிட்டி என்று பெயர்தான் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது .ஆனால் தனியார் பேருந்துகளில் புளி மூட்டை போல அடைக்கப்பட்டு பொது மக்கள்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பயணம் செய்யும் அவலம் இதுவரை தொடர்கிறது
மக்கள் இதை உணர வேண்டும் ஒட்டு போடும்போது
கொலை கொள்ளை பாலியல் கமிஷன் ஊழல் ..............இவைகள் மற்றும் தற்பெருமைகள் ......கடமையைக்கூட சாதனை என மக்கள் பனத்தில் விளம்பரம் செய்வது .......