ADVERTISEMENT
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் அதற்கு தமாகா முழு ஆதரவு அளிக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். "தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால பார்லி., தேர்தல் . தமிழக மக்கள் மற்றும் கூட்டணியின் நலனை கருத்தில் கொண்டு கூட்டணியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தமாகா ஏற்று கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு நமது கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
த. மா . க வைவிட எண்ணிக்கை குறைவாகிவிடும் போல் தெரிகிறது அதிமுக . ஏன் எனில் அத்துணை பிரிவுகள் . ஒன்றுபட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இல்லை. மேலும் செந்தில்பாலாஜி என்ற ஒரு அதிபயங்கரவாதி இருக்கிறார் .
கட்சி தொண்டர்களா.. எத்தனை பேர் .
இதற்கு எதற்கு நேற்று வெள்ளையும் சொல்லசியுமா உடை அணிந்து பேட்டி கொடுத்தீர்கள்.
இதை தான் நாங்க சொன்னோம். எல்லாரும் நகராட்சி போல் தனித்து போட்டி போட வேண்டும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.