இரட்டை இலை சின்னம் கேட்டு டில்லி செல்ல பழனிசாமி தரப்பு முடிவு

கடந்த முறை இத்தொகுதியில், த.மா.கா., வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இம்முறை த.மா.கா., போட்டியிட்டாலும், இரட்டை இலை சின்னத்தை பெற முடியாது. இதைக் காரணம் காட்டி, பா.ஜ., தரப்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பழனிசாமி தரப்பினர், த.மா.கா., போட்டியிடட்டும்; இல்லையெனில், சின்னம் கிடைக்காவிட்டாலும், தனித்து களம் இறங்கலாம் என்ற முடிவில் உள்ளனர்.
அதற்கேற்ப, டில்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனரை, அடுத்த வாரம் சந்தித்து, தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி கேட்க, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
மேலும், பன்னீர்செல்வம் தரப்பு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெயர், சின்னம், கொடி, போன்றவற்றை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

அதேபோல பன்னீர்செல்வம் தரப்பினரும், தேர்தல் கமிஷனரை சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் அணி தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், அரசியல் ஆலோசகர்பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில், வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.இதில், வீரவணக்க நாள் பேரணி நடத்துவது குறித்தும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து (13)
திருட்டு திமுகவின் கை கூலி அதிமுக தொண்டர்களால் விரட்டி அடிக்கபடுவான் எடபாடியார் தலைமையில் அதிமுக வீரு கொண்டு எழும்...
தமாகா வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிடலாமே.
இரட்டை இல்லை சின்னம் கிடைப்பது அரிது எனில், இதுதான் முடிவாக இருக்கும். சரியாக சொன்னீர்கள்,
பழனிசாமி மீண்டும் மீண்டும் தவறான செயல்களில்தான் கவனம் செலுத்துகிறார். இவர் டெல்லி செல்வதற்கு பதில் பன்னீரிடம் சென்று விஷயத்தை முடித்துக்கொண்டு கட்சியை செயல்படுத்தலாம். எதிர்க்கட்சி தலைமையில் இருந்து இன்று வரை திமுக அரசு செய்த, செய்து கொண்டு இருக்கின்ற அநியாயத்தை தட்டிகேட்டு மக்களுக்கு எந்த பயணம் செய்யவில்லை. இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது இவர்களால் எந்த கட்டணத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்க முடிந்தது. ஆனால் இன்று திமுக வின் சர்வாதிகார போக்கில் அனைத்து விலை வாசிகளும் உயர்ந்து நிற்கும் போது தனது பதவியில் மட்டுமே கண்ணாக இருக்கும் பழனிசாமி மக்கள் சேவகராக வேலை செய்யவில்லை .
ஈரோடு இடை தேர்தலில் இம்முறை த.மா.கா., போட்டியிட்டாலும், இரட்டை இலை சின்னத்தை பெற முடியாது, இரட்டை இலை இல்லாமல் த.மா.கா படுதோல்வி அடையும் இரட்டை இலை கிடைத்தாலும் த ம கா தோற்கும். அ தி மு க பல பிரிவுகளாக பிரிந்து விட்டது. மாற்று சமூகத்தினர் EPS, OPS, சசிகலா, தினகரனை பிரிந்துவிட்டதால், எல்லாரும் ஒரு ஜாதியின் தலைவராக தான் பார்க்கின்றனர். அம்மா கை காட்டிய அவரின் உண்மையான வாரிசு OPS தான் அவரை E PS, சசிகலா, தினகரனை கூட்டாக சேர்ந்து பதவி விலக செய்த போது ஒட்டுமொத்த தமிழ்நாடே OPS க்கு ஆதரவாகவும், E PS, சசிகலா, தினகரனுக்கு எதிராகவும் இருந்தது இதை யாரும் மறுக்க முடியாது. தமிழர்கள் என்றும் ஜாதி பார்த்து ஓட்டளிப்பது இல்லை. ஆனால் எந்த தலைவர் எதற்காக அரசியலில் நிற்கிறார் என்று தெரியாத தற்குறிகள் தமிழர்கள் இல்லை. EPS ஆதரவு அளிக்கும் MLA, MP, மாவட்ட நிர்வாகிகள் கட்சிக்காக ஆதரவு அளிக்க வில்லை. பணம், பதவிக்காக. OPS க்கு ஆதரவு அளித்தால் அவர் பிஜேபி உடன் சேர்ந்து பணம் அடிக்க விட மாட்டார் என்பதே நிதர்சன உண்மை. இவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இடை தேர்தலில் EPS, OPS, ஒன்று சேர்ந்ததால் தி மு க வரக்கூடாது என்று வக்காலத்தினர் . EPS அ தி மு க 60 இடங்களில் வென்றதை தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார் , அது தி மு க விற்கு எதிரான கூட்டணிக்கு அளித்த வாக்குகள். EPS க்கு தலைமைக்கு அல்ல. EPS சூழ்நிலையை பயன் படுத்தி வந்த சுயநலவாதி. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அல்ல. இது தான் உண்மை அதை உணராமல் கர்வம் பிடித்து திரிந்து கொண்டு இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் அவர் மட்டும் அவர் ஜாதிக்கு தலைவர் இல்லை, தி மு க செந்தில் பாலாஜி, தணிகையரசு எத்தின பேர் இருக்கின்றனர். ஆனா அனா ராமதாஸ்க்கே எல்லா வன்னியர்களும் வாக்களிப்பது இல்லை. அதிகபட்சமாக 25% வன்னியர் வாக்குகளை கூட அவர் பெற்றது இல்லை. எந்த ஜாதி மக்களும் எந்த ஜாதி தலைவருக்கும் அடிமைகள் இல்லை. த ம கா தோற்றால் இது தி மு க விற்கு பெரிய பலத்தை கொடுக்கும். ஆனால் BJP தனித்து நின்று ஒரு பலமான போட்டியை கொடுக்க முடியும் தனது பலம் பலவீனம் அறிந்து கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு. BJP தனியாக நின்று தோற்றாலும் சரியான போட்டி இட்டு தோற்கும் . இதை வைத்து 2024 தேர்தலுக்கும் 2026 தேர்தலுக்கும் உதவும். வாசன் ஒரு நல்ல தலைவர் ஆனால் அவருக்கு தொண்டர்களோ வாக்கு வாங்கியோ இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஒன்றை எல்லாரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை, மோடி க்கு வாக்களிப்பவர்கள் BJP ஓ அல்லது RSS கட்சி காரர்கள் கிடையாது பொது மக்கள். தி மு க வை எதிர்த்து நிற்பதால் தான் அண்ணாமலைக்கு, மோடிக்கு இவளவு ஆதரவு. அண்ணாமலைக்காக, மோடிக்காக ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டு கூட வாக்களிப்பார்கள். அதையே த ம கா விற்கு செய்ய மாட்டார்கள். தி மு க விற்கு இந்த தேர்தலில் அண்ணாமலையால் மட்டும் தான் சரியான போட்டி கொடுக்க முடியும். பிஜேபி ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்து எடுத்து அண்ணாமலை ப்ரிச்சரம் செய்தால் அது சரியான போட்டியாக இருக்கும் இதுவே கள நிலவரம். தனியாக நிற்காமல் அந்த இடத்தை கூட்டணிக்கு கொடுத்தால் மாற்றத்தினருக்கான வாக்குகள் சீமானுக்கு போய் சேரும். EPS என்றோ பிஜேபி யை கழட்டி விட்டு இருப்பார் பிஜேபி தி மு க வை களைத்து விடுவார் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தெரிந்தவரை மோடி மற்றும் அண்ணாமலை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை கலைக்க மாட்டார்கள். ஆயிரம் கருத்து வேறுபாடு, ஊழல் இருந்தாலும் சட்ட ரீதியாக அதை எதிர் கொள்வர். அரசியலுக்கு மக்களுக்கு சேவை செய்ய வர வேண்டும் காமராஜர், முத்துராமலிங்க தேவர், கக்கன், அம்பேத்கார், ஜீவானந்தம், நல்லகண்ணு போன்ற நேர்மையான தலைவர்களை போல். மக்கள் அண்ணாமலையை இந்த வரிசையில் வரவேண்டும் என்று ஆசை படுகின்றனர் காலம் தான் அதற்க்கு பதில் சொல்லும்.
சந்தடி சாக்கில் நல்லக்கண்ணு வை இந்த லிஸ்ட்டில் சேர்த்து விட்டீர்களே. திமுக வை ஊழல் பெருச்சாளிக் கட்சி என்று சாடிய அவரே தனது கட்சி அதே🙃 திமுக விடமிருந்து 15 கோடி பெற்றதை தடுக்கவில்லை. அந்த 15 கோடியை நேர்மையான🤪 வழியிலா சேர்த்திருப்பர்? ஆக அவரும் சந்தர்ப்பவாதிதான்.
"ம்மா கை காட்டிய அவரின் உண்மையான வாரிசு OPS தான் ..." ஆஹ் ஆஹ் ஆஹ் உளறல் ரொம்ப அதிகம் ஆயிடுச்சு போல.. அம்மா கை காட்டியது வாரிசு அல்ல.. அம்மாவின் அடிமை ... அடிமையிடம் கொடுத்தான் எப்படியும் திரும்ப கிடைக்கும் என்று ஆனால் அந்த கேப்ல அடிமை சம்பாதித்த பினாமி சொத்துகள் ஏராளம் .. அதனால் அம்மா கடுப்பானதும் அது பற்றி விசாரித்து அடிமையின் தம்பி பலிகடா ஆனதும் வரலாறு இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தால் அம்மா அடிமைக்கு ஆப்பு வச்சிருக்கும்
அரூர்ரங் அவர்களே நல்லகண்ணு என்பவர் இன்று அரசியலில் இருக்கும் ஒரே நல்ல மனிதர். அவரை பற்றி விவரம் தெரியாமல் மற்ற அரசியல்வாதிகளை பற்றி பேசுவது போல் பேசாதீர்கள். நல்லவர்களை மதியுங்கள். எதிர் அணியில் இருப்பதால் குற்றம் சொல்லவேண்டும் என்பதற்காக கூறாதீர்கள்
கட்சியில் ஒருவர் மட்டும் நல்லவராக இருந்தால் போதுமா ? கட்சியை அடகு வைத்தது உண்மை தானே
தமிழ் செல்வன் உங்கள் கட்சியை ஒழுங்காக வளர்க்க பாருங்கள் .அதிமுக விஷயத்தில் தலையிட வேண்டாம் .பாஜக தனியா நிற்பதை யார் தடுக்க முடியும் . அதற்காக அதிமுகவை இழிவு படுத்த வேண்டாம் .அம்மா கை காட்டிய அவரின் உண்மையான வாரிசு OPS தான்...எந்த அதிமுக தொண்டனும் இந்த வார்த்தையை நம்ப மாட்டான் .அதிமுக எடப்பாடி தலைமை இல் மிக பலமாக உள்ளது . எடப்பாடி தலைமை இல் எல்லா சாதியினரும் உள்ளனர் .பன்னீர் பக்கம் உள்ளவர்கள் நாலு பேர் .பன்னீர் அதிமுக தலைவரானால் அதிமுக காலியாகும் நம் கட்சி வளரும் என்று ஒரு கட்சி சில பேர் நம்புகின்றனர் .அது தவறான அணுகுமுறை . அம்மா இருந்தால் பன்னீர் பயனை ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி செய்கிறார் என்று சொல்ல முடியுமா .அதிமுக ஒரு கட்சியால் தான் திமுகவை வெல்ல முடியும் .பன்னீருக்கு அரசியலிலும் கட்சி இல் எந்த செல்வாக்கும் இல்லை .இதில் பெரிய ஜோக் என்ன வென்றால் .பன்னீர் சுத்தமானவராம் .அவர் பணம் அடிக்க விட மாட்டாராம் .வைத்தியலிங்கம் இந்த நேரம் அந்த கருத்தை பார்த்து சிரித்து இருப்பார்
ஓசி சோறு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஹாசன். குருமா, உதவா நிதி பிராசாரம் செய்தால் வெற்றி நிச்சயம்?