Load Image
Advertisement

முதல்வருடன் தமிழக காங்., தலைவர் அழகிரி சந்திப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல்; காங்.,கிற்கு ஒதுக்கீடு


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் தமிழக காங்., தலைவர் அழகிரி சந்தித்து பேசினார்.

Latest Tamil News


பிப்ரவரி -27 ல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா மற்றும் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இது குறித்து தமிழக காங்., தலைவர் அழகிரி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Latest Tamil News


இந்த ஆலோசனையின் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் யார்? விரைவில் அறிவிப்பு



காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் அழகிரி அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி நட்பு ரீதியாக கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்றுக்கொண்டார். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும். ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அழகிரி தெரிவித்தார்.



வாசகர் கருத்து (11)

  • Narayanan - chennai,இந்தியா

    அருமையான நாடகம் அரங்கேறியிருக்கிறது. பார்ப்போம்.

  • பிரபு - மதுரை,இந்தியா

    காங்கிரசாவது போட்டியிட தைரியமா வந்துட்டாங்க. மற்றவர்கள். தைரியத்தை பொறுத்திருந்து தான் பார்க்கணும். டெபாசிட்டாவது மிஞ்சணுமே.

  • மதுமிதா -

    திரு ராஜீவ் அவர்களின் கொலையாளிகள் விடுதலைதனிப் பொங்கலா அழகிரி சார்

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    காங்கிரஸ் வெற்றி நிச்சயம்...

  • N.K - Hamburg,ஜெர்மனி

    தோல்வி பயம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்