டில்லி மகளிர் ஆணைய தலைவரிடம் அத்துமீறிய கார் டிரைவர் கைது
புதுடில்லி: டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் 10-15 மீட்டர் வரை காரில் இழுத்துச் செல்லப்பட்டார். குடிபோதையில் டிரைவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் டில்லி போலீசார் கைது செய்தனர். மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டில்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால். இவர் இன்று(ஜன.,19) எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அப்போது குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், அவரை தனது காரில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் டிரைவர் தவறாக நடந்து கொண்டார்.
இதையடுத்து காரின் கண்ணாடியை மூடிவிட்டு 10 முதல் 15 மீட்டர் தூரம் வரை ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை உறுதி செய்த டெல்லி போலீசார் ஹரிஷ் சந்திரா என்ற கார் டிரைவரை கைது செய்தனர்.
இது குறித்து டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், நான் இரவில் பெண்கள் பாதுகாப்பை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் ஒரு நபர் என்னை துன்புறுத்தினார். அவரது அநாகரீகமான செயலை நான் எதிர்த்தபோது, அவர் தனது காரின் கண்ணாடியை மூடிவிட்டு சிறிது தூரம் என்னை இழுத்துச் சென்றார். இதையடுத்து கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார். மற்ற பெண்களின் பாதுகாப்பு பற்றி என்ன நினைப்பது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து டில்லி போலீசார் கூறுகையில், ஸ்வாதி மாலிவால், அதிகாலை 3.11 மணியளவில் எய்ம்ஸ் கேட் 2 க்கு எதிரே, குடிபோதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் 10-15 மீட்டர் தூரம் காரில் ஏற்றி சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஹரிஷ் சந்திரா, 47, மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (9)
மகளிர் ஆணையத் தலைவிக்கே இந்த கதி? மகளிர் அணித்தலைவி என்றா தப்பு செய்தான், எந்த பெண் அங்கிருந்திருந்தாலும், மதுவும் சேர்ந்திருந்ததால், தண்டனை கடுமையாக இருக்காது என்ற தைரியத்தில் செய்திருக்கிறான்.
ஆமா... டில்லி, இந்தியாவின் தலைநகரம்தானே... அந்த ஊர்லதானே பாராளுமன்றம் இருக்கு...
மகளிர் ஆணையத் தலைவிக்கே இந்த கதி...? உலகத்தின் “இந்தியா வல்லரசு” நாடு ஆயிடுச்சு... மை லார்ட்... இது சட்டம் ஒழுங்கு கீழே வராதா மிஸ்டர் அண்ணாமலை... டில்லி, பாகிஸ்தான்ல இருக்கா, இல்ல சீனாவுல இருக்கா.... அது இந்தியாவிலேதானே இருக்கு... இந்தியாவை எந்த கட்சி ஆள்கிறது சார்.... “நள்ளிரவில் ஒரு பெண் நகைகளுடன் பயமில்லாமல் நடந்து வருகிறாளோ... அன்றுதான் முழு சுதந்திரம் பெற்ற நாள்”...ன்னு சொன்ன காந்தியடிகள். அப்ப, இந்தியா சுதந்திர நாடு இல்லையா....?
சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தவறுதான் ஆனால் குடிகாரன் காரில் ஏன் ஏறவேண்டும்