ADVERTISEMENT
புதுடில்லி: காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.,27 ல் இடைத்தேர்தல் நடக்கும் எனவும், மார்ச் 2 ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா,(46) காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி தகவல் அளித்தார்.

இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.,27 ல் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவித்தார். ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2 ல் நடக்கிறது. இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
வாசகர் கருத்து (16)
அவசரம் அவசரமாக .. எதற்காக? கர்நாடக தேர்தலுடன் வைத்திருக்கலாம். ஒருவேளை எடப்பாடியையும் பன்னீரையும் அழம் பார்க்கவா ? திரிசங்கு சொர்க்கத்தில் அதிமுக நிலைமை...
ஐயா ம் வேய் ட்டிங் .................?????????
பிஜேபி வெற்றி பெரும் - நேர்மையாக தேர்தல் நடந்தால்.
திமுக கூட்டணிகள் தோல்விகளை இது நிர்ணயிக்கும். இது ஆரம்பம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
திமுக போட்டியிட்டால்,பாஜக நிச்சயமாக போட்டியிடாது, அத்தனை தைரியம் இருக்கிறதா என்ன?