ADVERTISEMENT
விஜயவாடா: வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஆசைப்பட்ட நபர் ஒருவர், தானியங்கி கதவுகள் மூடியதால் டிக்கெட் பரிசோதகரிடம் ரூ.6000 அபராதமும் கட்டியதுடன் 159 கி.மீ தூரம் பயணித்து அடுத்த ரயில் நிலையத்தில்தான் இறங்கியுள்ளார்.
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை பலரும் ஆர்வமுடம் பார்த்துச் செல்கின்றனர். அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ஒரு நபர் 'செல்பி' ஆசையில் ரயிலில் ஏறியுள்ளார். செல்பி எடுத்து இறங்குவதற்குள் ரயிலின் தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டன.

இதனால் பதறிய அந்நபர், கதவை திறக்க முயன்றும் முடியவில்லை. அதற்குள்ளாக ரயிலும் கிளம்பியது. இதனால் செய்வதறியாத நபர், 159 கி.மீ தொலைவில் அடுத்த ரயில் நிலையத்தில் (விஜயவாடாவில்) தான் இறங்கியுள்ளார்.
மேலும் டிக்கெட் இல்லாமல் பயணித்த குற்றத்திற்காக பரிசோதகர் அவருக்கு ரூ.6000 அபராதமும் விதித்துள்ளார். செல்பி மோகத்தால் சிக்கலில் சிக்கி ரூ.6000 அபராதமும் கட்டிய அந்நபருக்கு இது சிறந்த பாடம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (17)
அந்த நபர் செல்பி எடுக்கப்போய் முதலில் செல் என்ற வார்த்தைக்கு ஏற்ப ரயிலில் சென்றார் பிறகு பி - பீஸ் என்ற வார்த்தைக்கு ஏற்ப நடக்கும்படி பணம் கட்டும்படி ஆகிவிட்டதே பார்த்தீர்களா
இனி அந்த நபர் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யவே பயப்படுவார்.
. அவன்கிட்ட வசூல் பண்ணச் சொல்லுங்க பார்ப்போம்.
ஹா..ஹா.. செல் ஃபீ எடுத்து தவறி விழுந்து உயிரை மைத்துக்கொண்டவர்களை பார்க்கும்போது, இது பரவாயில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அன்று திருட்டு ரயிலில் பயணம் செய்தவரை பிடித்து இப்படி அபராதம் விதித்திருந்தால் இன்று அந்த கட்சியே இருந்திருக்காது.