ADVERTISEMENT
சென்னை: மறு உத்தரவு வரும் வரை, ரேஷன் கடைகளில் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொங்கலை முன்னிட்டு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரொக்கம், கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் பணி, 9ம் தேதி துவங்கியது; 13ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அன்று வரை, 2.13 கோடி பேர் பரிசு தொகுப்பு வாங்கிய நிலையில், 6 லட்சம் கார்டுதாரர்கள் வாங்கவில்லை. அவர்களில் பலர் பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊர்களுக்கு சென்றதால், பரிசு வாங்காமல் உள்ளனர்.

அரசின் சார்பில் அவகாசம் நீட்டிப்பு குறித்து, இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால், பொங்கல் பரிசு கிடைக்குமா என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.
இரு நாட்கள் பொங்கல் விடுமுறைக்கு பின், நேற்று ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. கார்டுதாரர்கள் வாங்காத, பொங்கல் பரிசு தொகுப்புகள் இருப்பு உள்ளன.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மறு உத்தரவு வரும் வரை, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குமாறு, மண்டல இணை பதிவாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.
வாசகர் கருத்து (2)
மத்திய அரசு அனைத்து விதமான பண விநியோகத்தையும் நேரடியாக வங்கிக்கு அனுப்பிவிடுகிறது. ஆனாம் மாநில அரசு டோக்கன் போட்டு கட்சிக்காரர்கள்தான் தனது சொந்தப் பணத்தை வினியோகிப்பது போல லேபல் ஒட்டி இன்புறுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதை ரேஷனில் வாங்கி டாஸ்மாக்கில் கொடுப்பது ரெண்டு வேலை அல்லவா? அதற்குப் பதில் டாஸ்மாக்கில் சரக்கு கொடுத்து கழித்து விட வேண்டியதுதானே?