இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்று கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

அமைதியாக வாழ்ந்து வளர்ச்சி பெறுவதா அல்லது ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நமது நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பதா என்பது நமது கைகளில் தான் உள்ளது. இந்தியாவுடன் 3 முறை போரில் ஈடுபட்டோம். அவை மூலம் மக்களுக்கு துயரம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை தான் கிடைத்தது. போரின் மூலம் பல பாடங்களை நாங்கள் கற்று கொண்டோம். அமைதியாக வாழ்ந்து, இந்தியாவுடன் உள்ள பிரச்னையை சுமூகமாக தீர்த்து கொள்ள விரும்புகிறேன்.
எங்கள் வளங்களை, வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் தான். இரு நாட்டு ராணுவங்களிடம் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது.
இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும். இதற்கு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு நடப்பதை அனுமதிக்க முடியாது. காஷ்மீரில் தாங்கள் செய்வதை இந்தியா நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (49)
காஷ்மீரை விட்டா அவனுங்களுக்கு விடிவு இல்லையேல் சரிவு
யாரைவேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் இந்த கயவர்களை எந்தக்காலத்திலும் நம்பக்கூடாது.
பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகும். இந்தியாவிடம் உதவி கேட்டு வரும் போது சர்வதேச அரங்கில் ஐ நா சபையில் இனி எப்போதும் காஷ்மீர் பிரச்சனையை பேசவே மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கையெழுத்து போட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதை இந்தியா பரிசீலித்து பிறகு உதவலாம்.
இன்னும் சில வருஷங்களில் உலகத்தில் elஎலக்ட்ரிக் வண்டிகள்தான் ஓடப்போகுது - அரபிக் பெட்ரோல் வாங்க யாரும் வரமாட்டாங்க - அதோட பாகிஸ்-களுக்கு இருந்த ஒரே சப்போரட்டும் காலி - அடுத்து எங்கும் ஏய்த்துப் பிழைக்க முடியாது - எல்லா இடமும் சாடிலைட் கேமரா - ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ட் ஆயுதங்கள்தான் சண்டை போடும் - இந்தியாவும் - உலக நாடுகளும் எங்கோ போய் விடும் so- அடுத்து வேலை செஞ்சாதான் சாப்பாடு - யாரும் வந்து காப்பாற்ற மாட்டார்கள் -
முதலில் தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைத்து தனது உண்மையான மன மாற்றத்தை நிரூபிக்க வேண்டும்.