Load Image
Advertisement

கவர்னருடன் சமாதானம் மாநில அரசு திடீர் முடிவு?

சென்னை--குடியரசு தினத்திற்குள், கவர்னருடன் இணக்கத்தை ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகிஉள்ளது.
Latest Tamil News

கடந்த 2021 செப்டம்பர் 18-ம் தேதி, தமிழக கவர்னராக ரவி பொறுப்பேற்றதில் இருந்து, தி.மு.க., அரசுடன் இணக்கமற்ற போக்கே நீடித்து வருகிறது.

உளவுத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய ரவி, பணி ஓய்வுக்கு பின், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர், நாகலாந்து கவர்னர் போன்ற முக்கிய பதவிகளில் இருந்தவர். பிரிவினைவாத இயக்கங்களை களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டவர்.

குடியரசு தினம்



அதனால், பிரிவினைவாத கொள்கைகளுக்கு எதிராக, கவர்னர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார்.

திராவிட இனம் என்பது தான், தி.மு.க.,வின் அடிப்படை கொள்கை. ஆனால், 'திராவிடம் என்பது இனமல்ல; இடம்' என, கவர்னர் பேசி வருவது, ஆளும் தி.மு.க.,வினரை கோபம்அடையச் செய்துள்ளது.

பொது நிகழ்ச்சிகளில், தி.மு.க.,வின் அடிப்படை கொள்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், கவர்னர் பேசி வருகிறார்.

இந்நிலையில், ஜனவரி 9-ம் தேதி சட்டசபையில உரையாற்றும் போது, மாநில அரசு தயாரித்து தந்த உரையில் சில பத்திகளை கவர்னர் தவிர்த்தார்.

அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின், 'மாநில அரசு தயாரித்த உரை மட்டுமே சட்டசபை குறிப்பில் இருக்கும்' என, தீர்மானம் கொண்டு வந்தபோது, கோபத்தில் கவர்னர் வெளியேறினார்.

இது, கவர்னருக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையேயான மோதலை வெளிச்சம் போட்டு காட்டியது.

அதை தொடர்ந்து, 14-ம் தேதி, தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மறைமுகமாக கவர்னரை ஒருமையில் விமர்சித்தார்.

அதேநேரத்தில், கவர்னரை தரக்குறைவாக விமர்சித்த தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, கவர்னர் தேசியக் கொடியேற்ற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, தமிழக அரசு மேற்கொள்ளும். தேசியக் கொடியேற்ற வரும் கவர்னரை, முதல்வர் வரவேற்பது மரபாக உள்ளது.

ஊழல் வழக்கு



இந்த விழாவில் தான், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான வேளாண் துறை சிறப்பு பதக்கம், கோட்டை அமீர் விருது ஆகியவற்றை, கவர்னர் வழங்குவார்.

எனவே, கவர்னர் -- தமிழக அரசு இடையே இணக்கமற்ற போக்கு நீடித்தால், குடியரசு தின விழாவும் சர்ச்சையாகும். இதை இரு தரப்பும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

எனவே, குடியரசு தினத்திற்குள் இணக்கமான சூழலை உருவாக்க, அரசு முயற்சித்து வருவதாகவும், அதை கவர்னர் தரப்பும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவர்னருடனான மோதல், அரசு நிர்வாகத்தை முடக்கி விடும் என, சில மூத்த ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முதல்வரிடம் எடுத்து கூறியுள்ளனர்.

இரு தரப்பிலும் இணக்கத்தை ஏற்படுத்த, அவர்களும் முயற்சித்து வருவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இரண்டு நாட்கள் பயணமாக, 13-ம் தேதி கவர்னர் ரவி டில்லி சென்றார். இது தனிப்பட்ட பயணம் என்றாலும், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன், சட்டசபையில் நடந்த சர்ச்சை உள்ளிட்ட தமிழக நிலவரங்கள் குறித்து, அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
Latest Tamil News
தி.மு.க., அமைச்சர்கள் பலர் மீது, ஊழல் புகார்கள் உள்ளன. சில அமைச்சர்கள் மீது, ஊழல் வழக்குகள் உள்ளன.

எனவே, கவர்னர் உடனான மோதல் நீடித்தால், அமைச்சர்கள் மீது வழக்கு தொடர, கவர்னர் அனுமதிக்கலாம். அது, தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என, தி.மு.க.,வில் சிலர் பேசுகின்றனர்.

எனவே தான், குடியரசு தினத்திற்குள் கவர்னருடன் இணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து (73)

  • Narayanan - chennai,இந்தியா

    இவர்களை நம்பமுடியாது . அங்கும் எதாவது செய்வார்கள் . கவனம் தேவை . அதற்கு முன் ஆட்சியை கலைத்துவிடலாமே.பொதுமக்களை கஷ்டப்படுத்தி வரி வசூலித்து கொள்ளை அடித்து ஆட்சி செய்ய இந்த ஸ்டாலின் அரசு வேண்டாம் .

  • T Sampath - TIRUVALLUR,இந்தியா

    DMK should give the Anna Medal to their party orator Shivaji Krishnamoorthy and also to be recommended for UNESCO award.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    கண் கெட்டபின் கண்ணாமூச்சி விளையாட்டு எதற்கு? அல்பத்துக்கு பவுஷு வந்தால் அர்த்த ராத்திரி கொடை பிடிக்குமாம் அதுபோலத்தான் நடப்பு

  • HONDA -

    வெட்க கேடு

  • Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா

    கவர்னர் பேச தொடங்கியவுடன் சில நரிகளின் சத்தம் கேட்டது அது எதனால் என்று தெரியாமலேயே பேசி கொண்டிருந்தார் அவ்வையர் பாரதி பற்றி ஒரு பிஹாரி தமிழில் பேசியதை பாராட்ட வேண்டிய சட்ட மன்றம் அசிங்கமாக தமிழகத்துக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் ஊளையிட்டது. விவேகானந்தர் பிறந்த நாள் பற்றி பேசியதை மற்றும் ஜெய் ஹிந்த் என கூறுவதை இழிவு நோக்கில் பார்த்த சட்ட மன்றம் இந்திய இறையாண்மைக்கு எதிராக அக்குறிப்புகளை நீக்கியது. மரபு படி தேசிய கீதம் நிகழிச்சி நிரலில் இருந்த பொது மரபு மீறி முதல்வர் எழுந்து நன்றி தெரிவிப்பதற்குபதில் அவமனப்படுத்தி பேசினார். அதன் அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்ட பின் அவையை விட்டு வெளியேறினார். தமிழ் நாட்டு மக்கள் தமிழக மக்கள் இரண்டும் ஒன்று தான். திராவிட மாடல் என்பது அரசியல் நிலைப்பாடு அது அரசின் செயல் பாடுகளில் வெளியிடப்பட வேண்டிய விஷயம் இல்லை. தமிழக மக்களுக்கு அதில் விருப்பமும் இல்லை. இதை புரிந்து கொண்டு நடந்தால் திமுக ஆட்சிக்கு மக்களின் சென்ற முறை வாக்களித்த மாறு பட்ட கருதினர் 13 % வாக்காளர்களின் ஆதரவு தொடரும் இல்லையேல் பிரசாந்த் கிஷோர் கணித்த மத ஓட்டுகள் மற்றும் கட்சி உறுப்பினர் தொல் கட்சி வாக்கு மட்டும் தான் கிடைக்கும் அது தோல்விக்கு வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி தி மு க வுக்கு எதிர்கால நடவடிக்கைக்கான எச்சரிக்கை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்