Load Image
Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை: திமுக எதிர்ப்பு


சென்னை:ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Latest Tamil News


இந்த கடிதத்தை திமுக வழக்கறிஞரும் எம்பியுமான வில்சன் சட்ட ஆணையத்தில் நேரில் வழங்கினார்.

Latest Tamil News

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஏற்கனவே ஆதரவு அளித்திருந்தது. இந்த பேச்சு எழுந்ததில் இருந்தே திமுக எதிர்ப்பு கருத்தை தெரிவித்து கொண்டே வந்தது.இந்நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.


வாசகர் கருத்து (43)

  • பாரத இந்துத் தமிழன் - Madurai 625007,இந்தியா

    அதிமுக ஆதரித்தால் திமுகவுக்கு வேறு வாய்ப்பே இல்லை எதிர்ப்பதைத் தவிர. மக்கள் வரிப்பணத்தை சிக்கணமின்றி செலவிடுதல். உலகவங்கியில் கடன் வாங்காமல் தன்னிறைவு பெற முயல்தல் ஆகியவை பொறுப்பான ஆட்சி செய்யும் கட்சிக்குத் தான் என எண்ணாமல், எல்லாக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தர வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், தேர்தலை மையமாக வைத்து செயல்புரிகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு முறை மத்தியத் தேர்தல், மாநிலத்தேர்தல் போன்றவை குறுக்கீடுவதால், வளர்ச்சித்திட்டங்கள் பற்றி கவனம் செலுத்தத் தவறுகின்றன. கட்சிகளிடம் மட்டும் கருத்து கேட்காமல், அரசியல் சாராத அமைப்புகளிடமும், ias,ips,ifs, Judges, Press,Educationists,Economists,Accountants எல்லாரிடமும் கருத்து கேட்டு நல்ல முடிவு எடுப்பது அரசின் கடமை.

  • ஆரூர் ரங் -

    மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சிகளின் உரிமை மற்றும் கடமைகள் வெவ்வேறு. ஆனால் உள்ளாட்சிகளின் கடமையான சாதாரண தெரு விளக்கு, சாக்கடைப் பிரச்சனைக்கு கூட MP யை🙃 அணுகுகிறார்கள். மதுரை MP, MLA க்கள் ஒரு படி மேலே போய் எய்ம்ஸ் விவகாரத்தில் மாநில அரசின் செயலின்மைக்கு மத்திய அரசைக் குற்றம் காண்கிறார்கள். மத்திய மாநில உள்ளாட்சிகளின் கடமைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வரை ஒன்றாகவே தேர்தல்களை🥲 நடத்துவது உசிதம். அநாவசிய செலவு மிஞ்சும்.🤔 தேர்தலில் வாக்களிக்க ஆயிரம் கிமி பயணிக்க வேண்டிய சூழ்நிலை மாற வேண்டும்.

  • hari -

    இத சொல்றதுக்கு உனக்கு எவளோ அறிவு வேணும் வேணு.........

  • nv -

    நாம தான் நல்லது எதையும் ஆதரிக்க மாட்டோமே.

  • nv -

    நாம தான் நல்லது எதையும் ஆதரிக்க மாட்டோமே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement