ADVERTISEMENT
மதுரை: மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர், பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப் புகழ் பெற்ற மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (ஜன.,16) காலை 8:00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.
இதில் சுமார் 860 காளைகள் பங்கேற்றன. பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் துணிவுடன் அடக்கினர்.

போட்டியின் முடிவில் 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதல் இடம் பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து வரும் இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டை மணிகண்டன் 2ம் இடம் பிடித்தார்.
அவருக்கு டூவீலர் பரிசு அளிக்கப்பட்டது. பாலமேட்டை சேர்ந்த ராஜா என்பவர் 15 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார். சிறந்த காளையாக திருநெல்வேலியை சேர்ந்த பொன்னர் சுவாமி கோயில் காளை தேர்வானது. காளையின் உரிமையாளருக்கு டூவீலர் பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் 10 பேர், பார்வையாளர்கள் 9 பேர், பத்திரிகையாளர் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!