Load Image
Advertisement

பொய் மூட்டைகளை அவிழ்த்து கூட்டணி தயவால் ஆட்சிக்கு வந்த திமுக: பழனிசாமி விமர்சனம்

DMK came to power with the help of alliance after untying the bundles of lies: Palaniswamis review பொய் மூட்டைகளை அவிழ்த்து கூட்டணி தயவால் ஆட்சிக்கு வந்த திமுக: பழனிசாமி விமர்சனம்
ADVERTISEMENT

சென்னை: தேர்தல் நேரத்தில் தமிழக மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணி கட்சிகளின் தயவால் திமுக ஆட்சிக்கு வந்ததாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.


எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க என்ற மாபெரும் பேரியியக்கத்தை எம்ஜிஆர் துவங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை பெற்று 3 முறை தமிழகத்தின் முதல்வராக நல்லாட்சியை வழங்கினார். சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கி எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர்.

Latest Tamil News
1972ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.


இன்றைய திமுக அரசு தேர்தல் நேரத்தில் தமிழக மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது. இந்த மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீரசபதம் ஏற்போம். கந்துஞ்சாது களப்பணி ஆற்றி மீண்டும் அதிமுக.,வின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (12)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இத டிவியிலே பாத்து தெரிஞ்சிக்கிட்டீங்களா?

 • ராமகிருஷ்ணன் -

  தவறு உங்களிடம் இருக்கும் போது திமுக எப்படி பொருப்பாகும். தே மு தி க வை நீங்கள் கூட்டணியில் சேர்ந்து இருந்தால் திமுக ஜெயித்து இருக்காது.

 • Narayanan - chennai,இந்தியா

  பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி . கடந்த தேர்தல் நீங்கள் முதல்வராக இருக்கும் போது . கோட்டை விட்டுவிடீர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்காமல் . அரசு இயந்திரம் உங்கள் கையில் இருக்கும் போதே அப்படி நடந்துவிட்டது . என்ன செய்ய ??

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  பச்சை தமிழன் எடப்பாடி கே பழனிசாமி ஐயா அவர்களே. நீங்கள் இந்த தமிழகத்துக்கு நிறைய நன்மைகள் செய்து இருக்கலாம். பனிரெண்டு அரசு மருத்துவகல்லூரிகள் கொண்டு வந்தது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாடு முழுக்க உள்ள ஆறு குளங்கள் ஏரிகளை தூர் வாரியது என்று நிறைய செய்து இருக்கலாம். ஆனால் காலத்தால் அழிக்க முடியாத ஒரு மாபாதக செயலை செய்துவிட்டீர்கள். தீர்த்தக்குளத்தில் சாக்கடையை கலந்து போல கட்டுமரத்தை வைக்க அனுமதி குடுத்து அந்த உத்தமர் அண்ணாவின் சமாதியை அசுத்தப்படுத்திவிட்டீர்களே. ஜெயலலிதா இருந்தால் நடக்குமா. அட போய் கேட்பதற்கு எவனுக்காவது தைரியம் இருந்திருக்குமா. நீங்கள் செய்த மாபெரும் தவறு. இந்த தவறுக்கு பிராயச்சித்தமாக வரும் 2026-2031 காலத்தில் ஒரு நல்லாட்சியை கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள் புருடா விடுவதில் வல்லவர்கள் திமுகவினர் என்று தமிழக மக்களுக்கு தெரியாமல் இல்லை. ஃப்ரியா உடுங்க. இந்த ஆட்சியின் லட்சணம்தான் அடுத்து உங்கள் ஆட்சியை அமரவைக்கப்போவது. குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூவா கொடுப்போம், சிலிண்டருக்கு நூறு ரூவா மானியம் கொடுப்போம், பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ஐந்து ரூவா குறைப்போம் என்று வாய்கூசாமல் அள்ளிவிட்டதை கூட அரசியல் உருட்டுக்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம் என்று காதுல பூ சுத்தனத்தை இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் கற்பனை கூட செய்து இருக்கமாட்டான்.

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  ஆக்கபூர்வமாக, மக்கள் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு வழிகூறுங்கள், குறைசொல்லி வாழ்வது எந்தப்பயனையும் அளிக்காது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்