ADVERTISEMENT
திருவெல்வேலி: திருநெல்வேலிக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை உளவுத்துறைக்கே தெரியாமல் கோசாலை ஒன்றில் இரவில் தங்கினார்.
அண்ணாமலை இரண்டு நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்கு வந்திருந்தார். கடந்த 12ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரா மையத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றவர் இரவில் திருநெல்வேலியில் மாவட்ட பா.ஜ., தலைவர் தயாசங்கர் நடத்தும் கேம்பிரிட்ஜ் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் சந்திப்பை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் துளியும் அரசியல் இல்லை. தமது கட்சியினரையே அங்கு வர வேண்டாம் எனவும், வரவேற்புகள் தர வேண்டாம் எனவும் கூறிவிட்டார். அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. குழந்தைகளின் கல்வி, எதிர்கால திட்டமிடல் அதற்கேற்ப கல்வி முறை குறித்து பேசினார். தொடர்ந்து மறுநாள் 13ம் தேதி கன்னியாகுமரி அருமனையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்பதற்கு செல்ல இருந்தார். இரவில் திருநெல்வேலியில் நட்சத்திர ஹோட்டலில் தங்குவதாக கறைப்பட்டது.

ஒரு தரப்பினர் அவர் கன்னியாகுமரி சென்று விட்டார் என தெரிவித்தனர். ஆனால் அவர் இரவில் எங்கே தங்கினார் என உளவுத்துறைக்கும் தெரியவில்லை.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் வல்லநாடு அருகே உள்ள கால்நடைகள் பராமரிக்கும் கோசாலை ஒன்றில் அவர் இரவில் தங்கினார். ஒரே ஒரு அறை மட்டும் உள்ள எந்த வசதியும் இல்லாத எளிய அந்த கட்டடத்தில் அவர் தங்கி இருந்தார்.
.

பகலில் அவர் திருநெல்வேலி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். அப்போதுதான் அவர் கன்னியாகுமரி செல்லவில்லை வல்லநாடு கோசாலையில் தங்கியது தெரிய வந்தது. வல்லநாடு கோசாலையில் எந்த வசதியும் கிடையாது ஒரு சிறிய அறையில் தங்கி இருந்தார்.
சோசாலையில் தங்கியிருந்த அண்ணாமலை, பொங்கல் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பசுக்களுக்கு பழங்கள் வழங்கினார். பிறகு நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார்.
.

அது பற்றி அண்ணாமலை கூறுகையில், நான் எளிமையை விரும்புபவன். அதனால் தான் அங்கு சென்று தங்கி இருந்ததாகவும் ஏற்கனவே அங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அவர் எளிமையை கடைப்பிடிக்கிறார்.
வாசகர் கருத்து (43)
திருச்சபை கோபாலபுர ஆட்கள், ஒருவர் முழு மதுவிலக்கு, சின்னவர் நீட் கொண்டு வராமல் இருப்போம் அந்த ரகசியம் சுடாலின்க்கு தெரியும் என்று, ஒருவர் ஏகப்பட்ட பொய்கள், கிஷோர் என்கிற பிராமணன் எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட், அதையும் இங்கு இருக்கும் மக்கள் நம்பி வோட்டு போட்டார்கள், இனி அடுத்த வருடம் தேர்தலுக்கு, கிஷோரின் புதிய ஸ்கிரிப்ட் ரெடி, மக்களும் ரெடி, வோட்டு போடுவதர்கு, எதர்கும் பிராமண தேவை, இந்த திருச்சபை ஆட்களுக்கு.
You can run, you cant hide... forever.
எங்கே போய்டப் போறாரு? நாளை மறுநாள் ஊழல் பட்டியல் ரெடின்னு சொல்லிட்டு கையில் வாட்ச் கட்டிக்குட்டு வருவாரு.
தமிழர்களுக்கு விடிவு காலம் அண்ணாமலை மூலமாக வரும். இந்த கோபாலபுரம். கொள்ளையர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்லாமல் வெளியில் தங்குவது எப்படி சரியாகும் .