ADVERTISEMENT
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக, தேர்தல் ஆணையத்திற்கு, அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ' ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்யும்படி, தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதன்படி, அரசியல்கட்சிகளிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்கிறது.
அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. பழனிசாமிக்கு அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்திற்கு 16 ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த கடிதத்திற்கு பதில் அளித்து பழனிசாமி அனுப்பி உள்ள கடிதத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதற்கு அ.தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
ஒரே சின்னம் அப்படி தானே ? தாமரை சின்னத்தில் ஆடீம்கா..
பிஜேபி மைண்ட் வாய்ஸ்."நமக்கு வாய்த்த அடிமைகள்"
ஆமாம். அடுத்த வருஷமே குஜராத்திலும் சட்டசபை தேர்தல் நடத்தப் போறாங்கோ..
தனக்கு தேசிய உணர்வு உள்ளதை காட்டியுள்ளார். நல்லது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1971 இல் காரணமில்லாமல் அரசியல் ஆதாயத்துக்காக ஓராண்டு முன்பே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல்😔 அறிவித்தார் இந்திரா காந்தி. அப்போது தமிழக முதல்வர் கருணாநிதியும் ஓராண்டு மீதி இருக்கும் போதே ராஜினாமா செய்து தேர்தலைக் கொண்டு வந்தார். அவர் சொன்ன காரணம்? இரண்டையும் ஒன்றாக😇 நடத்தினால் அநாவசிய செலவு மிச்சம். இப்போதுள்ள திமுக ஆட்கள் அதனை எதிர்ப்பது ஏன்? நாற வாய்கள்.