புதுடில்லி: தமிழக கவர்னர் ஆர் என் ரவி இன்று டில்லி கிளம்பி சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விளக்கமளிக்க உள்ளார்.

இந்நிலையில், கவர்னர் ரவி இன்று காலை 11:20 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' பயணியர் விமானத்தில், சென்னையில் இருந்து புதுடில்லி கிளம்பி சென்றார். அங்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்களை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நாளை இரவு 8:15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
வாசகர் கருத்து (42)
அப்போ உண்மையிலேயே விடிந்து விடுமா ???
ஆட்சியை கலைத்தால் மட்டும் போதாது... மக்களிடம் மன்றாடி, நடித்து மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு அதிகம்.... அதனால், 1967 முதல் இன்று வரை எவ்வளவு சொத்து உள்ளது குடும்ப corruption, மந்திரிகள் சொத்து பட்டியல்/ரிப்போர்ட் மக்கள் மத்தியில் வைக்கவேண்டும்... அப்போதுதான் திமுகவிற்கு நிரந்தர சங்கு ஊதப்படும்... இல்லை மொத்தமும் வேஸ்ட்...
ஆட்சியை கலைத்தால் மட்டும் போதாது... மக்களிடம் மன்றாடி, நடித்து மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு அதிகம்.... அதனால், 1967 முதல் இன்று வரை எவ்வளவு சொத்து உள்ளது குடும்ப corruption, மந்திரிகள் சொத்து பட்டியல்/ரிப்போர்ட் மக்கள் மத்தியில் வைக்கவேண்டும்... அப்போதுதான் திமுகவிற்கு நிரந்தர சங்கு ஊதப்படும்... இல்லை மொத்தமும் வெஸ்ட்...
இன்றைய டிவி செய்தி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது பற்றி விளக்கமாகக் கூறியது. முதலில் மேதகு கவர்னர் அவர்கள் தனது உரையைப் படிக்க ஆரம்பித்தது முதல் கூச்சலும், குழப்பமும் இருந்தது. கவர்னர் அவர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையை முழுவதுமாகப் படிக்காமலும், ஒரு சில வரிகளைத் தவிர்த்தும், சிலவற்றை மாற்றியும், சிலவற்றை சேர்த்தும் வாசித்ததாகக் கண்டனம் தெரிவித்தார்கள். மேதகு கவர்னர் அவர்களுக்கு எதிராகவே தீர்மானம் கொண்டு வந்ததோடல்லாமல், கவர்னர் அவர்கள் பேசிய அனைத்தும் அவைக் குறிப்பில் நீக்கப்பட்டு, அரசு வழங்கிய, பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட உரை மட்டும் அவைக் குறிப்பில் இடம் பெறும் என்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டது. எனவே தான், மேதகு கவர்னர் அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் என்பதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா என நினைக்கத் தோன்றுகிறது.
ஏதோ விடியலு மருமகன் விரைவில் கைதாமே? கவர்னர் எல்லா எவிடென்ஸ் ரெடி பண்ணி குடுத்துட்டாராம், சூசை பொங்கியது அதனால் தானாம்,மெய்யாலுமா?