Load Image
Advertisement

காங்கிரஸ் காமெடி பீஸ்: குஷ்பு கிண்டல்

Congress comedy piece: Khushbu teases    காங்கிரஸ் காமெடி பீஸ்:  குஷ்பு கிண்டல்
ADVERTISEMENT
நாகர்கோவில்: ''காங்கிரஸ் ஒரு 'காமெடி பீஸ்' கட்சி. அதனால் அந்த கட்சி சொல்வதை யாரும் மதிப்பதில்லை,'' என்று நடிகை குஷ்பு கூறினார்.

கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கவர்னர் விவகாரத்தில், தமிழகத்தில் எல்லாமே தவறாகத் தான் இருக்கிறது. தி.மு.க., அரசை மேற்பார்வையிடுவதற்கும், தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கவும் கவர்னர் இருக்கிறார்.

சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே போகும்போது, அமைச்சர் பொன்முடி, 'போய்யா' என கைகாட்டுகிறார்; பொன்முடி செய்தது பெரிய தவறு. இதற்கு முன், பஸ்சில் பெண்கள் 'ஓசி'யில் போவதாக பொன்முடி சொன்னார்.

'தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை' என காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி சொல்லி இருக்கிறார். அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை? காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ் கட்சி. அதை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • DVRR - Kolkata,இந்தியா

    திருட்டு முள்ளு கயவர்கள் கட்சியை விடவா ஒரு காமடி பீஸ் இருக்க முடியும் ஆய்வு என்று வாய்வு விடுதல் நாளையே எல்லோருக்கும் நல்லது நடக்க முடிவு செய்தால் அதாவது வெறும் பேச்சு தானே (உதாரணம் நீட் தேர்வு நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கப்படும் போல) அப்போ அப்போ ரூ 100 கோடி ரூ 1000 கோடி ரூ 2000 கோடி ரூ 3500 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு என்று சொல்லுதல் கடைசியில் பார்த்தா அப்படி ஒன்றுமே செய்யவில்லை. இப்படி எக்கச்சக்கம் இந்த திராவிட மாடல் ஆட்சியில்

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    அங்க இருந்தப்ப பிஜேபி பத்தி என்ன பேசினீங்கன்னு இன்னும் ஞாபகம் இருக்குது .....

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    சட்டசபையில் நடந்த ஒவ்வொரு செயலும் உண்மை மரைக்கப்பட்டு விட்டது. குஷ்பூ அவர்கள் அவைகளை ஒவ்வொன்றாக வெளி கொண்டு வந்தால் மக்களுக்கு நல்லது குட்டு வெளிப்படும் பொய் தகர்க்கப்படும்

  • R MANIVANNAN - chennai,இந்தியா

    உங்களுக்கு தானே தெரியும்

  • venugopal s -

    அந்தக் குறை பாஜகவிற்கு இல்லை, உங்களையும் சேர்த்து நிறையப் பேர் உள்ளனர்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement