Load Image
Advertisement

தமிழக அமைச்சர்கள் 13 பேரின் ஊழல் பட்டியல் தயார்

Corruption list of 13 ministers ready: Annamalai    தமிழக அமைச்சர்கள் 13 பேரின் ஊழல் பட்டியல் தயார்
ADVERTISEMENT
மதுரை: ''தமிழக அமைச்சர்களில், 13 பேரின் ஊழல் பட்டியல் தயாராக உள்ளது. இம்மாத இறுதியில் இருந்து, வரிசையாக வெளியிடப்படும்,'' என, மதுரையில் நடந்த தமிழக பா.ஜ., மாவட்ட தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது: மாதம்தோறும் இப்படியொரு கூட்டம், பல்வேறு நகரங்களில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டு, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நடக்கிறது. தமிழகத்தை பொறுத்த வரை, தி.மு.க., தான் அரசியல் ரீதியிலான ஒரே எதிரி. தி.மு.க.,வினரின் ஊழல், முறைகேடு, லஞ்சம், வாரிசு அரசியல் விமர்சனத்துக்குரியது.
Latest Tamil News
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், தமிழகம் எந்தந்த துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது என்ற விபரங்களை சேகரியுங்கள். அதை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். தமிழக அமைச்சர்கள், 13 பேரின் ஊழல் பட்டியல், ஆதாரங்களுடன் தயாராகி விட்டது.

இந்த மாத இறுதியில் இருந்து, ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். அதை ஆதாரமாக வைத்து கொள்ளுங்கள். பட்டி தொட்டியெல்லாம் மக்களிடம் இதை கொண்டு செல்லுங்கள். இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.


வாசகர் கருத்து (38)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    அந்த பதிமூன்று பெயரில் முதலமைச்சர் பெயரும் உள்ளதா?

  • nandha kumar -

    ஊழல்வாதிகள் யாரையும் தூங்கவிடாதீங்க

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    ஒன்றியம் இவர் மூலம்தான் மிரட்டல் கூட்டணி பேரம் நடத்துதுன்னு டவுட்டோ டவுட்டு .......

  • R MANIVANNAN - chennai,இந்தியா

    ஆதாரம் இருந்தால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியதுதானே ?. அது என்ன ஒரு மாதம் ?

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    அண்ணாமலை ஜி .... இப்படி உதாரு உட்டுக்கிட்டே இருக்குறதுல யாருக்கு என்ன பிரயோஜனம் சொல்லுங்க ???? கவர்னர் கிட்டே குடுக்கலாம்ல ???? அவரும் சனாதிபதியை, அமித் ஷாவை சந்திக்க தில்லி போறாராம் .... அவரு சனாதிபதி கிட்டே அல்லது அமித் ஷா கிட்டே கொடுக்கட்டுமே ???? நடவடிக்கை எடுக்கப்பட (ஐ மீன் விசாரணை, தண்டனை) வாய்ப்பிருக் கில்ல ???? ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியா இருந்திருந்தா அதை பண்ணுங்க ..... இப்படி ஊழல் குற்றச்சாட்டு சொல்லிக்கிட்டே இருந்து மக்கள் மனச கரைச்சு தாமரைக்கு ஒட்டு விழ முயற்சி பண்ணுறீங்களா ????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்