சென்னை: நமது மாநிலத்தில் தற்போது ‛தமிழகம்', ‛தமிழ்நாடு' பிரச்னையைத் தான் பெரிதாக நினைக்கிறது திமுக அரசு. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர், ‛தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரி' எனப் பேசியிருந்தார்.
இதற்கு சட்டசபையில் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பி வெளிநடப்பும் செய்தன. திமுக.,வினரும் கவர்னரின் தமிழகம் கருத்துக்கு எதிர்நிலையிலேயே உள்ளனர். தமிழ்நாடு என்பதே சரி என விவாதித்தும் வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி, ‛தமிழ்நாடு வெறும் பெயரல்ல, புவியியல், மொழியியல், அரசியல், பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பின், தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார் அண்ணாதுரை. அவர் வழியிலும், கருணாநிதி வழியிலும், தமிழ்நாட்டினை ஸ்டாலின் தலைமையிலான கட்சி அரணாக காத்து நிற்கும்' என கருத்து தெரிவித்திருந்தார்.

இப்படி தமிழ்நாடு தான் சரி என ஆணித்தரமாக பேசி வரும் திமுக.,வே பல இடங்களில் தமிழகம் என்ற வார்த்தையை தான் உபயோகித்திருந்தது உலகறிந்த விஷயம். அதை திமுக மறந்துவிட்டது தான் ஆச்சரியம்.
தி.மு.க., மகளிர் அணி செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி, 'பெண்ணை உயர்த்தும் பேராற்றல் திராவிட மாடல், தலைநிமிர்ந்த தமிழகம்' என, தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆங்கிலப் புத்தாண்டு அன்று, கருணாநிதி நினைவிடத்திலும், 'தலை நிமிர்ந்த தமிழகம்; மனங்குளிருது தினந்தினம்' என்ற வாசகத்துடன், மலர் அலங்காரம் செய்தனர்.
இதெல்லாம் தற்போது மட்டுமல்ல, கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்திலும் கூட தமிழகம் என்றே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரே திறந்து வைத்த அல்லது துவக்கி வைத்த திட்டங்கள் தொடர்பான கல்வெட்டுகள் பலவற்றில் தமிழக முதலமைச்சர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி இருவேறு விதமான நிலைபாடுகளில் இருக்கும் திமுக, அரசியல் செய்வதற்காகவே கவர்னரின் ‛தமிழகம் - தமிழ்நாடு' வார்த்தையை கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (70)
வேல்முருகன் கவர்னரை அவன், இவன் என்ன ஏக வசனத்தில் பேசி திமுக கட்சியின் ஊதுகுழலாக இருந்தாரே அவரது கட்சி பெயரில் ஏன் தமிழக என்ற வார்த்தைய பயன்படுத்துகிறார். முதலில் அதை மாற்று...
தமிழ் நாடு என்று பெயர் இருந்தால் என்ன தமிழகம் என்ற பெயர் இருந்தால் என்ன இருந்து விட்டு போகட்டும் ஆளுநரும் முதல்வரும் மக்கள் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யுங்கள்
தமிழ்நாடு முன்னேற்ற கழகம்.....கட்சி பெயர் நல்ல இருக்கே .....உண்மையிலேயே தமிழர்களுக்கான கட்சி என்றால் ...கட்சி பெயர் இப்படி தான் இருக்க வேண்டும்....திராவிட முன்னேற்ற கழகம்...என்பது தமிழர்களை ஏமாற்றும் வேலை!!!
ஏண்டா 200 ரூபாய் உபிஸ்....உங்கள் தலைவரே தமிழகம் என்று தான் கூறுகிறார் ....இதிலே ஆளுநர் சொன்னது மட்டும் இவர்களுக்கு குற்றமாக தெரிகிறது ....என்ன தான் 200 ரூபாய் , குவாட்டர் மற்றும் ஓசி பிரியாணி கொடுத்தாலும் ...அதற்காக இப்படியா முட்டு கொடுப்பது ???
ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா, ஏன் பேச்சை (நான் சொன்னதை/சொல்வதை) மத்தவங்க சொல்லக் கூடாதுன்னுதான் சொல்வேன். அதுதான் திமுகவின் வாரிசு அரசியல்.