Load Image
Advertisement

90 வயதில் ஆசை நாயகிக்கு சொத்து கட்டிய மனைவி கதறலுடன் புகார் மனு

சேலம்: சேலத்தில், 90 வயதில் ஆசை நாயகிக்கு எழுதி வைத்த சொத்துகளை மீட்டு, பாதுகாப்பு வழங்ககோரி கதறலுடன் முதல் மனைவி, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினார்.


சேலம், ஓமலுார் டேனீஸ்பேட்டை, பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள், 82; இவரது மகள் கமலா, 60, என்பவருடன், நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்து, கணவர் பழனியப்பன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு வழங்கினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவர் பழனியப்பனுக்கு, 90 வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். என் கணவர், ஏற்கனவே குப்பாயி, 70, என்ற பெண்ணுடன் தொடர்பிலிருந்தார்.

தற்போது, மூன்றவதாக பழனியம்மாள், 70, என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான, 6.5 ஏக்கர் நிலத்தை, கணவர் பழனியப்பன், பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார். மேலும், நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு, எங்களை மிரட்டுகிறார். கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல், இந்த வயதில் கடும் சிரமப்பட்டு வருகிறோம்.

கணவரிடமிருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement